ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

விகடன் வாசகர்களுக்கு,  எழுத்தாளர்  பிரபஞ்சனின் வணக்கம்.

காதல் என்பது, மிகவும் அற்புதமான விஷயம். அதில் இரண்டு மனம் இணைவது மட்டும் அல்லாமல், சாதி என்ற நோய் அழிகிறது என்ற ஆரோக்கியமான காரணமும் இருக்கிறது. பெரியார், காதல் திருமணங்களையே பெரிதும் ஆதரிக்கக் காரணம், வேறு சாதியில் காதலித்து மணம் முடித்தால், மெள்ள மெள்ள சாதி மறைந்துவிடும் என்ற நம்பிக்கைதான். காதலை அதிகமாக எதிர்ப்பது சாதி அமைப்புகள்தான். இதன் உள்ளிருக்கும் காரணம் என்ன, இதை மாற்ற என்ன செய்யலாம்... சொல்கிறேன் கேளுங்கள்.

நதிக்கரையில்தான் நாகரிகம் பிறந்தது. நம் சந்ததிகளின் ஆதாரமாக இருக்கும் அந்த நதிகளை நாம் எவ்வளவு பாதுகாக்கிறோம் என யோசித்தால் கேள்விக்குறிதான். கூவம் நதி சாக்கடையாக்கப்பட்டதே அதன் சமகால உதாரணம். `ஒரு காலத்தில் கூவத்தில் குளித்துவிட்டு, மக்கள் தங்கள் வேலைக்குச் சென்றனர்' என்கிறது சென்னை வரலாறு. அதைச் சாக்கடையாக்கியது யார்... நாம்தானே? வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் அங்கு கடைப்பிடிக்கும் சுகாதார விஷயங்களை, இந்தியா வரும்போது கடைப்பிடிப்பது இல்லை. அது ஏன்? சொல்கிறேன் கேளுங்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்