மாணவர் அரசியல் தவறா?

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார், தேசத் துரோகக் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டிருக்கும் விவகாரம், நாடு முழுக்க பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் நினைவு நாளையொட்டி, இந்திய அரசைக் கண்டித்து மாணவர்களைத் திரட்டி பேரணி நடத்தியதற்காகவே இந்தக் கைது. ‘அங்கீகரிக்கப்பட்ட ஜனநாயக வழிமுறைகளின்படி ஒருவர் தன் கருத்தை வெளிப்படுத்துவது எப்படி தேசத் துரோகமாகும்?’ என்பதுதான் கருத்துச் சுதந்திரத்தின் மீது அக்கறைகொண்டோர் எழுப்பும் கேள்வி.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜே.என்.யு) என்பது, இந்திய அறிவுலகின் நாற்றங்கால். அரசியல், கலாசாரம், மொழி, இலக்கியம், சமூகச் செயல்பாடு என இந்தப் பல்கலைக்கழக மாணவர்கள், கல்விக்கு அப்பாலான சமூக உரையாடலை எப்போதும் நிகழ்த்திக்கொண்டே இருக்கின்றனர். அதனால்தான் இங்கு பயின்று வருவோர் பெரும் அரசியல் தலைவர்களாகவும் அறிவுசார் நிபுணர்களாகவும் வலம்வருகின்றனர். இந்த மதிப்பு, ஜே.என்.யு-வில் நடைபெறும் தங்குதடையற்ற கருத்துப் பகிர்வினால் மட்டுமே சாத்தியமாகிறது. இந்த உரையாடல் தளத்தை, அரசு தனது கைது நடவடிக்கையின் மூலம் இப்போது முடக்கிவைக்க முயற்சிக்கிறது. கன்னையா குமாரின் கைதுக்கு பெரும் எதிர்ப்புகள் கிளம்பிய பிறகு, அந்தப் பேரணிக்குப் பின்னால் தீவிரவாத சக்திகளின் தொடர்பு இருப்பதாகச் சொல்லி, எல்லோர் வாயையும் அடைக்கப்பார்க்கிறது மத்திய அரசு. ஆனால், தான் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை மட்டும் வெளியிட மறுக்கிறது.

ஜே.என்.யு-வில் மட்டும் அல்லது கன்னையா குமாருக்கு மட்டும் இப்படி நடக்கவில்லை. சமீபத்தில் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக ஆய்வு மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை செய்துகொண்ட நிகழ்வும் இத்தகையதுதான். மத்திய அரசை விமர்சித்து அவர் மேற்கொண்ட போராட்டங்களின் விளைவாக இடைநீக்கம், விடுதியில் இருந்து வெளியேற்றம், உதவித்தொகை நிறுத்தம் என... இறுதியில் தற்கொலை செய்துகொள்ளும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார். சில மாதங்களுக்கு முன்னர் சென்னை ஐ.ஐ.டி-யில், ‘அம்பேத்கர் பெரியார் வாசிப்பு வட்டம்’ தடைசெய்யப்பட்ட நிகழ்வும் இத்தகையதே.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்