விஜயகாந்துக்கு ஏன் இந்த மவுசு?

சொதப்பலா... திணறலா... சாமர்த்தியமா? தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியின் பின்னணி!ப.திருமாவேலன், படம்: சு.குமரேசன்

`தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி - குலாம்நபி ஆசாத் அறிவிப்பு' என்ற அறிவிப்பு, பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தன்று வெளியானது. இவர்கள் எப்போது பிரிந்திருந்தார்கள்... மீண்டும் சேர்வதற்கு?
`மறந்தால் அல்லவா நினைப்பதற்கு?’ என்ற காதலர் தின ஊடலைப்போலவே இருந்தது காங்கிரஸ் தலைவர்களை, கருணாநிதி தனது வீட்டுக்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. இரண்டு கட்சிகளும் சண்டை போட்டுக் கொள்வதுபோல ஊர் உலகத்துக்கு இதுவரை காட்டிக்கொண்டிருந்தார்கள்; இப்போதுதான் உடன்பாடு ஏற்பட்டதுபோலவும் காட்டிக் கொள்கிறார்கள்.

கடந்த 2004-ம் ஆண்டு தொடங்கிய தி.மு.க - காங்கிரஸ் நட்பு, இடையில் ஒரே ஓர் ஆண்டைத் தவிர நெருக்கமாகவும் இறுக்கமாகவும் இருந்தது.

2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இது முதன்முதலாகப் பூத்தது. 2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தொடர்ந்தது. 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில்கூட உடைய வில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் பலமாக இருந்தது. ஆனால், போன நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க-தான் வேண்டுமென்றே தன்னை காங்கிரஸிடம் இருந்து வலுக்கட்டாய மாகப் பிரித்துக்கொண்டது அல்லது பிரித்துக் கொண்டதாக நடித்தது. இதோ 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் கூட்டு. ஒரு காலத்தில் காங்கிரஸுக்கும் எம்.ஜி.ஆருக்கும் தான் பந்தம் அதிகம். இப்போது கருணாநிதிக்கும் காங்கிரஸுக்கும் செம கெமிஸ்ட்ரி.

கருணாநிதி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் என்ன பேசினார்? `காங்கிரஸ் நமக்குத் துரோகம் செய்துவிட்டது’ என்றார். ‘ராகுல், மோடி ஆகியோர் பிரதமராக நமது ஆதரவு இல்லை’ என, கையை விரித்தார்.

`ஈழப் பிரச்னையை, அன்றைய காங்கிரஸ் மத்திய அரசு சரியாகக் கையாளவில்லை’ என்றும், `ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆ.ராசாவையும் கனிமொழியையும் காங்கிரஸ் அரசு கைதுசெய்தது’ என்றும் 2013-ம் ஆண்டில் திடீர் ஞானோதயம் வந்தது கருணாநிதிக்கு.

தி.மு.க பொதுக்குழுவில் கருணாநிதியின் கர்ஜனையை இன்று படித்தாலும் உடம்பு புல்லரிக்கும்.

`தி.மு.க தனியாக நின்றாலும் நிற்குமே தவிர, நம்மை மதிக்காத, அலட்சியப் படுத்துகிற காங்கிரஸ்காரர்களைப் போல நன்றி மறந்து செயல் படுபவர்களுடன் கூட்டணி வைக்காது.

` `சைபர்... சைபர்... என ஏழு சைபர் போட்டு ஆயிரம் லட்சம் கோடி ஊழல் நடந்திருக்கிறது' எனச் சொல்லி, `அதற்கு எல்லாம் யாரும் காரணம் அல்ல. ஒரே ஒரு நபர்தான்... ராசாதான்' என நம்முடைய தம்பி ராசாவை சிறையில் வைத்து, இன்னமும் அவர் மீது வழக்கு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ராசா மாத்திரம் அல்ல, என் மகள் கனிமொழியை எட்டு மாத காலம் சிறையிலே வைத்து வாட்டி இன்னமும் வழக்கு நடக்கிறது. குற்றமே செய்யாதவர்களைக் குற்றவாளியாக சி.பி.ஐ மூலமாகக் கூண்டிலே ஏற்றினார்கள் என்றால், அந்த சி.பி.ஐ யாருடைய கை வாள், யாருடைய கையிலே இருந்த கடிவாளம், சி.பி.ஐ யார் கையிலே இருந்த ஆயுதம்?’ என கருணாநிதி கர்ஜித்தபோது பொதுக்குழு உறுப்பினர்கள் நெக்குருகிப்போனார்கள். `இத்தகைய கொடூர காங்கிரஸோடு கூட்டணி கூடாது' எனக் தொண்டர்களை நினைக்க வைத்தார் கருணாநிதி.

முழுமையாக மூன்று ஆண்டுகள் முடிவதற்குள் இதோ குலாம்நபி ஆசாத் கோபாலபுரம் வீட்டு வாசலில் நின்று, ‘காங்கிரஸுக்கு மிகவும் நம்பிக்கை யான கூட்டணிக் கட்சியாக
தி.மு.க இருந்துள்ளது’ என்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்