பால் மீசையோடு பார்த்துக்கொள்கிறார்கள்!

கவிதை: கார்த்திக் நேத்தா

கோழி முட்டையின்

கனமிருக்கும் இவ்வமைதி

கன்றுக்குட்டியின்

நெற்றியை நீவிவிடும்போது

பார்த்துக்கொண்டிருக்கும் பசுமாட்டின்

மனநிலையில் இப்போது

வானம் இருக்கிறது.

சுடச் சுடப் போய்க்கொண்டிருக்கும்

சாணத்தின் ஆவியோடு

கலந்துபோகிறது காலைப் பனி.

குளிரக் குளிர நாயோடு

மூத்திரம் போய்க்கொண்டிருக்கிறாள்

மாயாகுட்டி.

அடுப்படியில் இருந்து

வாசல் வந்து வானம் பார்த்து

கொட்டாவிவிடுகிறது பூனை.

கோவிந்தம்மா வீடு பெருக்கும்போது

திண்ணையில் போய் அமர்ந்துகொள்கிறது

ஆட்டுக்குட்டி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்