மைல்ஸ் டு கோ... - 1

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
புதிய தொடர் - 1இயக்குநர் வெற்றி மாறன், படங்கள்: ஸ்டில் ராபர்ட்

அடர்ந்து இருள் படர்ந்து கிடக்குது காடு.
செல்ல வேண்டும் பல காத தூரம்.'


`மைல்ஸ் டு கோ... உன் வாழ்க்கையின் எந்த ஒரு சூழ்நிலையிலும் நீ மறக்கக் கூடாத மந்திரம் இது. ‘நீ கடக்கவேண்டியது வெகுதூரம்’னு ராபர்ட் ஃப்ராஸ்ட் சொன்ன இந்த வாக்கியம் ஒருத்தரை உற்சாகப்படுத்தலாம்; ஆறுதல்படுத்தலாம்; பாராட்டலாம். உன் உச்சத்தை உடனே தொட்டுடாதே... `தொட்டுட்டோம்’னு நினைப்பு வந்துட்டாக்கூட, அதுக்கு அப்புறம் வளர்ச்சி இல்லை’னு ஒருநாள் சொன்னார் என் டைரக்டர். உண்மைதான். உச்சிக்குச் சென்றுவிட்டால், எல்லா பக்கங்களும் சரிவுதான். அதான் எப்பவும் நான் எனக்கே சொல்லிக்கொள்கிற மந்திரம்...  ‘மைல்ஸ் டு கோ’!

சைதாப்பேட்டை பக்கம் பேர்ன்பேட்டை என்ற இடத்தில், ஓர் ஒண்டிக்குடித்தன ரூமில் இருந்து பள்ளிக்குப் போய் வந்தப்பவும் நான் வெற்றி மாறன்தான். வெனிஸ் உலகத் திரைப்பட விழாவில் ‘விசாரணை’ படத்துக்காக விருது வாங்கினப்பவும் அதே வெற்றி மாறன்தான். பேர்ன்பேட்டைக்கும் வெனிஸ் விழாவுக்கும் நடுவில் நான் கடந்த மைல்கள்தான் இதுவரையிலான என் வாழ்க்கை. அப்படி நான் நினைச்ச, நடந்த, நடந்து கடந்த, கடக்க விரும்பும் மைல்களைப் பத்தி பேசலாம். இந்த முன்-பின் காலப் பயணத்தைப் பிரிக்கிற புள்ளியா இப்போ கண் முன்னால் நிற்பது ‘விசாரணை’!

 ஆரம்பம் தற்செயலா நடந்ததுதான். ஒருநாள் தனுஷிடம் ‘தியேட்டர்ல மூணே மூணு நாள் ஓடுற ஒரு படம் இருக்கு. தயாரிக்கிறீங்களா?’னு கேட்டேன். ‘உலகத்துல எந்த டைரக்டரும் ஒரு தயாரிப்பாளரிடம் இப்படிச் சொல்லியிருக்க மாட்டாங்க’னு சிரிச்ச தனுஷ், என் மீதுள்ள நம்பிக்கையில் கதையைக்கூட கேட்காமல் அங்கேயே `ஆரம்பிச்சிடலாம்'னு சொன்னார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்