நிலம்... நீர்... நீதி!

குவிகிறது நிதி!

கொடும்சேதத்தை ஏற்படுத்திய மழை-வெள்ளத்தை அடுத்து, விகடனின் ‘அறம் செய விரும்பு’ திட்டம் மூலம், மழை-வெள்ள நிவாரணப் பணிகளைத் தொடங்கிவிட்டோம். கூடவே, நீண்டகாலத் தீர்வு என்கிற வகையில் நீர்நிலைகளைப் பாதுகாப்பது, ஆக்கிரமிக்கப்பட்ட நீர்நிலைகளை மீட்டெடுப்பது என்ற இரட்டை நடவடிக்கைகளையும் முன்னெடுக்க இருக்கிறோம். இதற்காக விகடன் நிறுவனம் சார்பில் ஒரு கோடி (1,00,00,000) ரூபாய் நிதியை முதல் கட்டமாக வழங்கியதோடு, இந்த நீண்ட நெடிய அறப்பணியில் தமிழ் மக்களைக் கரம் கோக்க அழைப்புவிடுத்தோம். இதையடுத்து, இன்றைய தேதி (26/12/2015) வரை  59,34,742 ரூபாய் நிதியை வாரி வழங்கியிருக்கிறார்கள் நம் வாசகர்கள் (நிதி வழங்கியவர்களின் பெயர்கள் உள்ளிட்ட விவரங்கள் விகடன் இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும்).

நிதி ஒரு பக்கம் குவிந்துகொண்டிருக்க... வெள்ள பாதிப்பிலிருந்து சென்னை உள்ளிட்ட பகுதிகளை மீட்கும் வகையில் முதற்கட்ட ஆலோசனைகளும் ஆரம்பமாகிவிட்டன. இவை பற்றிய விரிவான தகவல்கள் அடுத்த இதழில் இடம்பெறும்.

நிலம் காப்போம்! நீர் காப்போம்! நீதி காப்போம்!

- ஆசிரியர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick