ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

படம்: கே.குணசீலன்

விகடன் வாசகர்களுக்கு வணக்கம்... நான் எழுத்தாளர், சூழலியலாளர் நக்கீரன் பேசுகிறேன்.

எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். சென்னை வெள்ளத்தில் ஒருவருக்கு ஒருவர் உதவிய மனித நேயத்தைக் கண்டோம். இது இன்னும் விரிவடைந்து உயிர்ம நேயமாக மலர வேண்டும். ஒரு பேரிடரில் நாம் கற்றப் பாடத்தை, மற்ற உயிரினங்கள் தம் வாழ்வாகவே வாழ்ந்துவருகின்றன. அதை ‘ஒருங்கியைந்த (symbiosis) வாழ்வு’ என்பர். இப்படி தினைக் குருவிகளுக்கும் எறும்புகளுக்கும் இடையே நிலவும், ஒரு நெகிழ்ச்சியான வாழ்வை பற்றிக் கேட்டால் நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள்... சொல்லவா? 

புவி வெப்பமயமாதல், காலநிலை மாற்றம்... என சூழலியலாளர்கள் பேசத் தொடங்கினாலே நிறையப் பேர் அலுத்துக்கொள்வார்கள். ஆனால், இதன் விளைவால் தமிழ்நாட்டுக் கடற்கரையில் இருந்த இரு தீவுகள் மூழ்கிவிட்டன என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

நம் நாட்டில் நடப்பது வளர்ச்சி அல்ல; வீக்கம். வளர்ச்சி என்பதை இப்படியும் பிரிக்கலாம்... `வளர்+ச்சீ’. இதில் `வளர்’ என்ற பகுதி வணிக நிறுவனங்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் போய்ச்சேர, மக்களுக்கு எஞ்சுவதோ ‘ச்சீ’ மட்டும்தான். இதை விளக்க போபால் நச்சுவாயு நிகழ்வின் போது நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தைக் கேட்டால், நீங்கள் அச்சத்தில் அதிர்ந்துபோவீர்கள்.

`ஒரு மொழியுடன் பிறமொழி கலந்துப் பேசினால் என்ன ஆகிவிடப்போகிறது?’ என நினைப்பவரா நீங்கள்... அப்படியானால் அது எவ்வளவு பெரிய சிக்கல் என்பதையும் அவசியம் அறிந்துகொள்ள வேண்டும். இப்போது பேசப்படும் தமிங்கிலீஷில் இருந்து ஒரு வாக்கியத்தை எடுத்து, மொழியியல் அகழாய்வு செய்தால், அதிர்ச்சி முடிவே கிடைக்கும். அந்த அதிர்ச்சி என்ன?
மனித உடலில் 70 சதவிகிதம் தண்ணீர். கடின எலும்பில்கூட 31 சதவிகிதம் நீர் இருக்கிறது.

`நீர் அருந்தாமல் நீண்ட நாட்கள் உயிர்வாழக்கூடிய விலங்கு எது?’ எனக் கேட்டால், `ஒட்டகம்’ என்போம். ஆனால், அது தவறு. நீரை உறிஞ்சிக் குடிக்கும் ஒரே பறவை, 5 கி.மீ தொலைவில் இருந்தே நீரை மோப்பம் பிடிக்கும் விலங்கு, நாம் சுவாசித்து விடும் மூச்சுக்காற்றில் உள்ள தண்ணீரின் அளவு... என தண்ணீர் பற்றிய பல ஆச்சர்யத் தகவல்கள் அறிவோமா?

31-12-15 முதல் 6-1-16 வரை 044-66802911* என்ற எண்ணில் அழையுங்கள். அறிவுபூர்வமாகப் பேசுவோம்.

அன்புடன்,

நக்கீரன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick