சொல்வனம்

படம்: அசோக் அர்ஸ்

 ஒரு மிட்டாயும்...  ஒரு சாக்லேட்டும்...

‘இதுல மயக்கமருந்து ஏதும் கலக்கல'
என்று சொன்ன பிறகும்கூட
டெய்ரிமில்க் சாக்லேட்டை வாங்க மறுத்தாள்
என்னருகே பேருந்தில் பயணித்த
கல்லூரிப் பெண்.
தனியாய்ச் சாப்பிட சங்கடப்பட்டு
சாக்லேட்டை பைக்குள் வைத்துவிட்டு
ஜன்னலுக்கு வெளியே வெறித்தபடி சிறிதுநேரம் மௌனமானேன்.
அரைமணி நேர வற்புறுத்தலுக்குப் பின்
நான் கொடுத்த சாக்லேட்டை
வாங்கிப் புன்னகைத்தவள்
தன் பையிலிருந்து எடுத்த
எக்லேர்ஸ் மிட்டாயொன்றை
என்னிடம் கொடுத்தாள் புன்னகையோடு.
டெய்ரிமில்க் சுவைத்தபடி நானுமதை
வாங்கிப் பத்திரப்படுத்தினேன்.
இரண்டரை மணிநேரப்
பயண உரையாடல் முடிந்து
பேருந்து நிலையத்தில் விடைபெற்று
ஒருவர் பார்வையில் ஒருவர் மறைந்த பிறகு, அவள் கொடுத்த எக்லேர்ஸ் மிட்டாயை எடுத்து வீசிவிட்டேன் குப்பைத்தொட்டியருகே.
அதற்கும் அருகிலேயே கிடந்தது
ஒரு டெய்ரிமில்க்.

- கிருத்திகா தாஸ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்