கலைடாஸ்கோப் - 21

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
எண்ணம் வண்ணம்: சந்தோஷ் நாராயணன்

``ந்த இன்ஜெக்‌ஷனைப் போட்டீங்கன்னா, உங்க குழந்தை நிச்சயமா டாக்டர் ஆகிடும்; சொந்தமா மல்ட்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல் கட்டும்... கேரடி” என்றான் சேல்ஸ்மேன் விவேக்.
பெற்றோர்கள், கண்களைச் சுருக்கிக் கேட்க ஆர்வமானார்கள்.

விவேக், தன் பார்வையைத் தாழ்த்தவும், அசிஸ்டென்ட் திறந்துவைத்த ஃப்ரீஸர் பாக்ஸில் ஆவிபறக்க விதவிதமான இன்ஜெக்‌ஷன்கள் இருந்தன.

``இந்த இன்ஜெக்‌ஷனைப் போட்டீங்கன்னா, சூப்பர் இன்ஜினீயர். எதிர்காலத்துல யு.எஸ்-ல செட்டில் ஆகலாம். இது சிங்கர் ஆகுறதுக்கு. பட்டமும் பங்களாவும் ஷ்யூர் ஷாட். இதோ இந்த ஊசி மேத்தமேட்டீஷியன் ஆகுறதுக்கு. உங்க வீட்டில் இருந்தும் ஒரு ராமானுஜன், சகுந்தலா தேவி வரணுமா... வேண்டாமா?” என்றான்.

பெற்றோர்கள், வாயைப் பிளந்தபடி அதை ஆமோதித்தார்கள். அசிஸ்டென்ட் ஆச்சர்யமாகப் பார்த்தான்.

``இப்படி என்ன வேணுமானாலும் ஆகலாம். நீங்க கண்ட கனவு, நீங்க வாழணும்னு ஆசைப்பட்ட வாழ்க்கையை உங்க பிள்ளைகள் மூலமா நிறைவேற்றிக்கலாம்” - கொஞ்சம் அழுத்திச் சொன்னான். பெற்றோர்கள் பெருமூச்சு விட்டபடி தயாரானார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்