யார் அந்த சார்லி?

பா.ஜான்ஸன்

யார் என்றே தெரியாத ஒருவனைத் தேடி ஒரு பெண் பயணிக்கும் கதைதான் ‘சார்லி’.

டெஸாவுக்கு (பார்வதி), வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் வீட்டைவிட்டு வெளியேறுகிறார். தோழி மூலம் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துக் குடியேறுகிறார். அந்த வீடு முழுக்க புத்தகங்கள் நிறைந்திருக்கின்றன. அதில் ஒரு காமிக்ஸ் புத்தகத்தை எடுத்துப் பார்க்கிறார். அந்தக் கதை முடிவு இல்லாமல் இருக்கிறது. அதை வரைந்தது, முன்னர் இங்கு தங்கியிருந்த சார்லி (துல்கர்) எனப் புரிகிறது. கதையின் தொடர்ச்சியை அறிந்துகொள்ள, வீட்டில் இருந்த துல்கரின் புகைப்படத்தை எடுத்துக்கொண்டு அவரைத் தேடிப் புறப்படுகிறார் பார்வதி. அவரைக் கண்டுபிடித்தாரா... அந்தக் கதையின் தொடர்ச்சி என்ன என்பதே மீதிக் கதை.

முக்கியத்துவமே இல்லாத அந்தப் பயணம் அத்தனை அழகாக, சுவாரஸ்யமாக நீள்வதே படத்தின் ஜீவன். படத்தில் அதிக பில்டப்கள் என்னவோ துல்கருக்குத்தான்... ஆனால், நிஜ ஹீரோ பார்வதி. துல்கரைத் தேடும் தீவிரம், பின்னர் அதைப் பாதியில் கைவிட்டு அடையும் விரக்தி என பார்வதியின் ரியாக்‌ஷன்கள் அனைத்தும் அத்தனை ஆசம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்