ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

விகடன் வாசகர்களுக்கு வணக்கம். நான் வழக்குரைஞர் அருள்மொழி பேசுகிறேன்.

2015-ம் ஆண்டு இறுதியில், தமிழ்நாட்டை பேரிடராகத் தாக்கிய மழை வெள்ளத்தால் நாம் கொஞ்சம் அதிர்ந்துதான் போனோம். இதுவரை நாம் கேள்விப்படாத, பார்த்திராத பேரழிவு அது. அப்போது சென்னை மக்கள் எந்தவிதத் தொடர்புகளும் இல்லாமல், ஒரு வாரம் வாழ்ந்தார்கள் என்பது உண்மையாகவே அதிசயம்தான். குடும்பத்தோடு மகிழ்ச்சியாகப் பேசுவது, இரவு சீக்கிரம் படுக்கச் செல்வது, இருக்கும் கொஞ்சம் உணவு, தண்ணீரை அர்த்தபூர்வமாகப் பயன்படுத்துவது என மனிதர்களின் பல நல்லியல்புகள் அப்போது வெளிப்பட்டன. இவை தொடர்ந்தால் சமூகத்தில் உருவாகும் நல்ல மாற்றங்கள் பற்றி சொல்லவா?

தீவிரவாதம்தான் இப்போது உலகம் எதிர்கொள்ளும் மிகப் பெரிய அச்சுறுத்தல். இதற்கு முக்கியக் காரணம் அடிப்படைவாத மனப்போக்கு. அது என்ன அடிப்படைவாதம்? மத அடிப்படைவாதம், தேசிய அடிப்படைவாதம், மொழி அடிப்படைவாதம்... இப்படி எதை வேண்டுமானாலும் உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். இந்தியாவில் இந்துக்களே அதிகம் வாழ்கிறார்கள். அதனால், `நாங்கள் வைத்ததே சட்டம். மீதம் இருப்பவர்கள் எங்களுக்குக் கட்டுப்பட்டு வாழ்கிறவர்கள். அவர்களை இந்தியாவில் வாழ அனுமதிப்பதே நாங்கள் கொடுத்த பெரிய சலுகை’ என நினைத்தால், அதுதான் மத அடிப்படைவாதம். இந்தப் பெரும்பான்மை மனப்போக்கே இங்கு நிலவும் பல பிரச்னைகளுக்குக் காரணம். அதை மனதளவில் களைவது எப்படி?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்