கூட்டணிக்கு ஜே? குழப்பத்தில் ஜெ!

ப.திருமாவேலன், ஓவியங்கள்: ஹாசிப்கான்

ஜெயலலிதா சலனப்பட்டுப்போய் இருக்கிறார். சென்னை திருவான்மியூரில் பொதுக்குழு என்ற பெயரால் கூட்டப்பட்ட அ.தி.மு.க திருவிழாவில் அவர் பேசியிருக்கும் பேச்சு, அவர் பெரிய குழப்பத்தில் இருக்கிறார் என்பதை பட்டவர்த்தனமாகப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறது!

‘நாற்பது நாடாளுமன்றத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டி’ என ஒருகாலத்தில் அறிவித்த ஜெயலலிதா அல்ல இவர்.

‘எனக்கு முன்னால் பார்க்கிறேன். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளையே காணோம்’ என கர்ஜித்த ஜெயலலிதாவைக் காணவில்லை.

`எந்தக் கட்சியையும் கூட்டுச்சேர்க்காமல் தனித்து நிற்க அ.தி.மு.க தயார்;  கருணாநிதி தயாரா?' என ஜெயலலிதா வாயில் இருந்து வார்த்தைகள் வரவில்லை.

‘எங்களுக்கு எவர் தயவும் தேவை இல்லை’ என்ற பிரகடனத்தைப் பார்க்க முடியவில்லை.

பழைய ஜெயலலிதாவின் இந்தப் போர்ப்பிரகடனங்கள் எல்லாம் வெள்ளம்போல வடிந்துவிட்டன. வரப்போகும் தேர்தல் அவரைப் பயமுறுத்தத் தொடங்கியிருப்பது அவரது வார்த்தைகளிலேயே தெரிகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்