“எல்லாருக்கும் செம ஹாப்பி!”

நா.சிபிச்சக்கரவர்த்தி, படங்கள்: தி.குமரகுருபரன்

``வாவ்..! சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ஆனந்த விகடன் விருது ஜெயிச்சது எனக்கு அவ்ளோ சந்தோஷம். நான் எதிர்பார்த்த நேரத்துல கிடைச்ச, பெருமையான,  நம்பிக்கையான விருது'' - சந்தோஷம் பொங்கப் பேசுகிறார் நடிகர் கருணாகரன்.

``எல்லா ஃப்ளாஷ்பேக்லயும் சொல்ற மாதிரி, திருச்சியில படிச்சு முடிச்சதும் நானும் வேலை தேடி சென்னைக்கு வந்தவன்தான். மார்க்கெட்டிங் வேலைதான் முதல் வேலை. அங்க மூணு மாசம் வேலைசெஞ்சு, ஒரு கிளையன்ட்கூட பிடிக்க முடியலை. வேலையைவிட்டுத் தூக்கிட்டாங்க. அடுத்து ஆறு மாசம் பி.பி.ஓ-ல வேலை. அங்க இருந்து ஒரு ஐ.டி நிறுவனத்துல வேலைக்குப் போனேன். ரொம்ப நல்ல பிள்ளையா, பொறுப்பா ஆறு வருஷம் வேலைபார்த்தேன். அங்கதான் என் மனைவி தென்றலைச் சந்திச்சேன். அந்த கம்பெனியில தென்றல் எங்க ஹெச்.ஆர்'' என்றவர் ``என்னம்மா நான் சொல்றது சரிதானே'' என்று மெல்லிய குரலில் கேட்க, சிரித்துக்கொண்டே `டபுள் ஓ.கே' சொல்லி தலையாட்டுகிறார் தென்றல்.

`` என் மனைவி தென்றலோட தாய்மாமாதான் சண்முகநாதன் சார். கலைஞர் ஐயா தலைமையில்தான் எங்க காதல் கல்யாணம் நடந்தது. மூத்த மகள் மேக்னா,  ப்ளஸ் ஒன் படிக்கிறாங்க. ரெண்டாவது மகள் தில்லானா, ஸ்கூலுக்குப் பொறுமையா போலாம்னு வீட்டுலயே விளையாடிட்டு இருக்காங்க'' என்று ஃபேமிலி இன்ட்ரோ கொடுத்த கருணாகரன், அடுத்து சினிமா இன்ட்ரோவுக்குள் நுழைந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்