உயிர் பிழை - 22

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
மருத்துவர் கு.சிவராமன், படம்: அருண் டைட்டன்

னதின் ஓரத்தில் மண்டிக்கிடந்து, எப்போதாவது கிடைக்கும் அமைதிப் பொழுதுகளில் மட்டும் எழுந்து ஆர்ப்பரித்து, பெருமூச்சுவிடவைக்கும் பள்ளிப் பருவ நினைவுகள் இல்லாதவர்கள் இருக்க முடியாது. அந்த நினைவுகளில், வெறும் உறவுச் சிலாகிப்பு மட்டும் உறைந்திருப்பது இல்லை; பெரும் உயிர் வாழ்வியல் விதிகளும் வேர் விட்டிருக்கும்.

ஸ்கூலில் கிரகோரி வாத்தியாரின் முத்தமிழ் முழக்கம், ஸ்கூல் போகும் வழியில் விரசலாகக் கடந்துபோன கான்வென்ட் பெண்ணின் கடைக்கண் ஓட்டம், முதல் பந்திலேயே பிடிகொடுத்து வ.உ.சி மைதானத்தின் சுவர் ஏறிக் குதித்து ஓடிய அவமானம் மாதிரி, 35 வருடங்கள் தாண்டியும் மறக்க முடியாத ஒரு பொருள் உண்டு. அது இப்போது சந்தையில் உள்ளதா என எனக்குத் தெரியவில்லை. அது அப்பாவின் சவரத்துக்கான `அசோக் பிளேடு’.
 
கயிற்றின் ஒரு முனையை விரல்களுக்கு இடையில் பிடித்துக்கொண்டு, பம்பரத்தின் பருத்த வயிற்றில் ஆறாவது சுற்றை இறுக்கமாகச் சுற்றும்போது, `எவ்ளோ நேரமாக் கூப்பிடுறேன்.காதுல விழல?’ என்ற குரலுடன் பிடரியில் தட்டும் ஒரு சின்ன அடி அதிகம் வலிக்காது. ஆனால், மிக அதிகமான எரிச்சலைத் தரும். ஒரு ரூபாய் காசோடு அப்பா நின்றுகொண்டு, `போய்... சீக்கிரமா அசோக் பிளேடு வாங்கியா!’ என விரட்ட, ஞாயிறு காலைப் பொழுதில் எஸ்.ரமேஷுடன் ஆடும் பம்பர விளையாட்டு முறிந்துபோவதுதான் வலியைத் தாண்டிய எரிச்சலின் காரணம். அந்த பிளேடுக்கு அப்பாவின் தாடையைத் தாண்டி பல பயணம் உண்டு. அந்த அசோக் பிளேடை சவரக் கத்தியில் லாகவமாக மாட்டி, எப்போதோ வாங்கிய சவரச் சோப்புக்கட்டியை பழைய பிரஷ்ஷால் குழைத்து, ரசம் மங்கிப்போன கண்ணாடியை முன்வாசலில் அமர்ந்து சவரம்செய்யும் காட்சி, இன்னும் எனக்கு வரிமாறாத மனப்பாடக் கவிதை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்