வலைபாயுதே V 2.0

சைபர் ஸ்பைடர்

facebook.com/guru.shree.16:

வந்த வெள்ளத்தில் நண்பர் வீட்டில் தரைத்தளம் மூழ்கிவிட்டது. காஸ்ட்லியான பொருட்கள்  எல்லாவற் றையும் எடுத்துக்கொண்டு முதல் தளத்துக்குச் சென்றுவிட்டனர் நண்பர் குடும்பத்தினர். பாவம்... மழையும் விட வில்லை; வெள்ளமும் வடியவில்லை. நண்பரின் அம்மா கேட்டாராம்... `ஏன்டா... பட்டுப் புடைவைகளை மட்டும் எடுத்து வந்தியே... இந்த நைட்டிக்கு மாத்து நைட்டி எடுத்துட்டு வந்தியா? பட்டுப் புடவையைக் கட்டிக்கிட்டு ஹெலிகாப்டரைப் பார்த்து பொட்டலம் கேட்டா, என்னடா நினைப்பான் பைலட்?’ என்று!

facebook.com/bhopathy :
அரசாங்கம், `நல்லது செய்றோம்’னு நம்மளை ஏமாற்றி வரி வாங்குது. கார்ப்பரேட், வரி கட்டாம அரசை ஏமாற்றி கம்பெனி ஆரம்பிக்கிறான். நாம ஆபீஸ்ல வேலைபார்க்காம அவனை ஏமாற்றி சம்பளம் வாங்குறோம். வாழ்க்கை ஒரு வட்டம்டா!

facebook.com/guru.shree.16:
பண்டிகைங்க வந்தால்தான் நாம எந்தெந்த வாட்ஸ்அப் குரூப்ல எல்லாம் இருக்கோம்னே தெரியுது!

facebook.com/bhopathy: ‘அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும், அதிகமாகக் கோபப்படுற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்லை’னு ரஜினி சொல்றார். ஆனா பாருங்க... கலைஞரும் அம்மாவும்தான் மாறி மாறி சி.எம் ஆகுறாங்க!

facebook.com/ArumugaSelvamV: ஜல்லிக்கட்டு நடக்க, மாட்டுப் பொங்கல் அவசியம் இல்லை. தேர்தல் மட்டுமே அவசியம் என்பதை உணர்ந்த வருடம் 2016.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்