கதகளி - சினிமா விமர்சனம்

ண்ணன் மீதான ஆத்திரத்தில் குடும்பத்தைக் கெடுத்த வில்லனை, காத்திருந்து பழிதீர்க்கும் இன்னொரு தம்பியின் கதை.

`தம்பாவைக் கொன்றது யார்?’ - என்பதுதான் ஒன்லைன். கடலூரையே தன் மீசைக்குள் புதைத்து  வைத்திருக்கும் முரட்டு வில்லன் தம்பா. விஷால் குடும்பம், முன்னாள் எம்.எல்.ஏ., தொழிலதிபர்... என தெருவுக்கு நான்கு எதிரிகள். கூலிப்படை ஒன்று தம்பாவை ஸ்கெட்ச் போட்டுத் தூக்கிவிட, வெறியாட்டம் ஆடுகிறது அவனது கும்பல். நான்கு நாட்களில் விஷாலுக்குத் திருமணம். இந்தச் சூழலில் போலீஸ், விஷாலை பலியாடு ஆக்க நினைக்கிறது. விஷால் தப்பிப்பதும், உண்மைக் கொலைகாரன் யார் என்ற ட்விஸ்ட்டுமே கொலவெறி கதகளி!

யூ.எஸ் ரிட்டர்ன் பாலீஷ் விஷால்... கேத்ரீன் தெரெசாவுடன் லவ்வுவது, அண்ணனுக்கு ஹெல்ப்புவது, நண்பர்களுடன் டான்ஸுவது... என எல்லாமே தெரிஞ்ச ஸ்டேட்டஸ்தான். இருந்தாலும் லைக்ஸ் போடலாம். கொஞ்சம் குண்டாகி வந்திருக்கிறார் ‘மெட்ராஸ்’ கேத்ரீன் தெரெசா. அண்ணனாக மைம் கோபியும், அந்த டெரர் இன்ஸ்பெக்டரும் நச் நடிப்பு. மெசேஜ் சொல்வதற்காகவே நேந்து விடப்பட்ட சமுத்திரக்கனிக்கு இப்போது வில்லன் அவதார சீஸன்போல. இதில் தம்பாவுக்கு டப்பிங் தந்து மிரட்டுகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்