தாரை தப்பட்டை - சினிமா விமர்சனம்

`அன்பானவர்களில் ஒருவர் கொலை செய்யப்பட, இன்னொருவர் ஆடும் ருத்ரதாண்டவம்’ எனப் பழகிய பாலா டெம்ப்ளேட் படம்.

`நாகரிகமான விக்ரம்’ சசிகுமார், ஒரு தாரை தப்பாட்டக் குழு நடத்துகிறார். அதில் `பொம்பளை சூர்யா’ வரலட்சுமி ஸ்டார் டான்ஸர். சசி மீது வரூவுக்கு அப்படி ஒரு காதல். ஆனால், வரலட்சுமியைத் திருமணம் செய்ய வரூ அம்மாவிடம் கெஞ்சிக் கெஞ்சிக் கேட்கிறார் ஆர்.கே.சுரேஷ். ஆட்டக்காரிக்கு வந்த அதிர்ஷ்டம் என அம்மா சசியிடம் கெஞ்ச, அவரும் வரலட்சுமியைத் திருமணத்துக்குச் சம்மதிக்கவைக்கிறார். ஆனால், சுரேஷோ, முடி வளர்ந்த `நான் கடவுள்’ ராஜேந்திரன். அவரால் வரலட்சுமி சித்ரவதை செய்யப்பட, ஆரம்பிக்கிறது சசிகுமாரின் வெறியாட்டம். ஃபர்ஸ்ட் ஹாஃப் காமெடி, செகண்ட் ஹாஃப் டிராஜடி என அப்படியே `பிதாமகன்’தான். ஆனால், திரைக்கதை செம சாதாமகன் ஆனதுதான் சோதனை.

`தொப்புள்ள ஸ்டார் போடு மாமா’ என ராவான ரொமான்ஸ்... `அக்காங் மாமா... அக்க்க்க்க்காங் மாமா’ என மயக்கும் மாடுலேஷன்... `கல்யாணம் பண்ணிக்கோ’ என்னும் சசியின் முதுகில்விடும்  லாங் ரன்னிங் லெக் கிக்... என வரலட்சுமி சுற்றிச் சுற்றி அடிப்பதெல்லாமே கொலக்குத்து கோல்கள். ஆட்டக்கலைஞிக்கே உரிய உடலும் உடல்மொழியும் என அட்டகாச லட்சுமி. சன்னாசியாக சசிகுமார்...  அடங்கி, அடங்கி க்ளைமாக்ஸில் எகிறுகிறார். வேலை ரொம்ப கம்மி. சாமிபுலவராக இந்தப் படத்திலும் ஜி.எம்.குமாருக்கு வெயிட் கேரக்டர். தனக்கான சாராயத்தை தானே சம்பாதித்த சந்தோஷத்தில் செத்தாலும் மனதில் நிற்கிறார். இவர்களைத் தாண்டி கூட்டத்தில் நமக்கு ஹைஃபை சொல்வது வில்லன் ஆர்.கே.சுரேஷ் மட்டுமே. முரட்டுத் தோற்றமும் மிரட்டல் குரலுமாக செம என்ட்ரி. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்