“நான் முதல்வர் வேட்பாளர் இல்லை!”

ஆ.விஜயானந்த், படம்: கே.கார்த்திகேயன்

ட்டசபைத் தேர்தல், கூட்டணிப் பேச்சுவார்த்தை... என தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்பாக இருந்தாலும், எந்தவித அலட்டலும் இல்லாமல் அமைதியாகக் காட்சி அளிக்கிறது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசனின் ஆழ்வார்பேட்டை இல்லம். `வரும் தேர்தலில், அ.தி.மு.க-வுடன்தான் வாசன் கூட்டுசேர்வார்’ என்கிற பேச்சுக்கள் இறுதி வடிவம் எடுக்க ஆரம்பித்திருக்கும் சூழலில், ஜி.கே.வாசனைச் சந்தித்தேன்.

``மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தொடங்கி, 14 மாதங்கள் ஆகிவிட்டன. மக்களிடம் உங்களுக்கு எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கிறது?''

“மாவட்ட, நகர, கிராமங்களில் உள்ள பெரும்பாலான காங்கிரஸ் கட்சித் தொண்டர்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் கட்சியாக நாங்கள் உருவெடுத்திருக்கிறோம். இந்த ஒரு வருட காலத்தில் ஆர்ப்பாட்டம், போராட்டம் என மக்கள் பிரச்னைகளில் முழுமையாக ஈடுபட்டுள்ளோம். த.மா.கா வளர்ச்சியடைந்து வருகிறது.”

``1996-ம் ஆண்டு மூப்பனார் கட்சி தொடங்கியபோது காங்கிரஸ் வாக்குவங்கி அவர் வசம் இருந்தது. இந்த வாக்குவங்கி அப்படியே உங்களுக்குக் கிடைக்கும் என எப்படி நம்புகிறீர்கள்... தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை இப்போது பலமாக இருக்கிறதே?''

“மறைந்த தலைவர் மூப்பனாரின் பலம் தனி. அவர் கட்சி தொடங்கியபோது மக்களிடம் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அன்றைய அ.தி.மு.க அரசுக்கு எதிரான அலை தீவிரமாக இருந்தது. தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் கட்சியைத் தொடங்கி, தீவிரப் பிரசாரம் செய்தார். தேர்தலில் வெற்றி முகம் கிடைத்தது. இப்போது அரசியல் சூழல் மாறிவிட்டது. நான் த.மா.கா-வை ஆரம்பித்ததுகூட கடினமான ஒரு  சூழலில்தான். காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் பெரும் பாலானோர் எங்களோடு இருக்கிறார்கள். உண்மை நிலை, தேர்தலின்போது மக்களுக்குத் தெரியவரும்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்