தமிழுக்கான அரியணை!

தமிழ்மகன், படங்கள்: பா.காளிமுத்து

லகின் தலைசிறந்த ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான இருக்கை அமைக்கும் பணியை, தமிழ் இருக்கை அமைப்புக் குழுவினர் சென்னையில் அறிமுகப்படுத்தினர். `தமிழ் இருக்கையின் தேவை விளக்க விழா’, `தமிழ் இருக்கை கீதம் குறுந்தகடு வெளியீட்டு விழா’, `அறக்கொடை அறிமுக விழா...’ என முப்பெரும் விழாவாக சென்னையில் அது நடைபெற்றது.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பேசும்போது, ‘‘ `ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை' என்பது அங்கு தமிழுக்கு என ஒரு நாற்காலி வைப்பது அல்ல... உலகின் முன்னணிப் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு ஓர் இருப்பிடம் ஏற்படுத்தும் முயற்சி. ஹார்வர்டில் பயின்றவர்களில் 47 பேர் நோபல் பரிசு பெற்றவர்கள்; 37 பேர் நாட்டின் அதிபர்களாக இருந்தவர்கள்; 48 பேர் புக்கர் பரிசு பெற்றவர்கள். இதில் இருந்தே அதன் பெருமையை உணரலாம். அதில் தமிழ் மொழி இடம்பெறும்போது, தமிழில் உலகின் பல மொழியியல் அறிஞர்கள் ஆய்வுசெய்ய வருவார்கள். உலகம் எங்கும் அவை குறித்து பேசப்படும். தமிழ் இருக்கை ஏற்படுத்த 40 கோடி ரூபாய் தேவை.  மருத்துவர்கள் சம்பந்தம், ஜானகிராமன் ஆகியோர் இணைந்து ஒரு மில்லியன் டாலர் அளித்துள்ளார்கள். அதாவது இருவரும் சேர்ந்து சராசரியாக சுமார் ஆறு கோடி ரூபாய் அளித்துள்ளனர். பெரிய முயற்சியின் முதல் படியை அவர்கள்ஆரம்பித்துவைத்துவிட்டார்கள்’’ என்றார்.

நேரடியாக ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பணத்தைச் செலுத்த வழிவகை செய்திருப்பதையும், வரிவிலக்கு சலுகைகள் இருப்பதையும் தேவைப்பட்டால் தாங்களே வீடு தேடி வந்து பணத்தைச் செலுத்த உதவுவதாகவும் விழாக் குழுவினர் தெரிவித்தனர். (இந்தியாவில் தொடர்புகொள்ள டாக்டர் ஆறுமுகம்: 044- 28333088). http://harvardtamilchair.com இணையம் வாயிலாகவும் பணம் செலுத்தலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்