சாதி எனும் அநாகரிகம் - (ஆண் திமிர் அடக்கு!)

நான்கு பெண்கள்... நான்கு பார்வைகள்!ஜெயராணி, ஓவியம்: கார்த்திகேயன் மேடி

ந்தியாவின் ஒடுக்கப்பட்ட சமூகத்துக்கு இரண்டு அடையாளங்கள். ஒன்று, தீண்டத்தகாதவர்கள்; இன்னொன்று தீவிரவாதிகள். முன்னது சாதியால் வந்தது; பின்னது மதத்தால் விளைந்தது. முன்னது தலித் மக்களையும், பின்னது முஸ்லிம்களையும் காலங்காலமாகத் துரத்துவது. நாடு விடுதலை அடைந்த பின்னரும், பல அரசியல் சமூக மாற்றங்களுக்குப் பின்னரும், உலகமயமாக்கலுக்குப் பின்னரும், புதிய பொருளாதாரப் புரட்சிகளுக்குப் பின்னரும், நம்ப முடியாத இந்தத் தகவல்தொழில்நுட்ப எழுச்சிகளுக்குப் பின்னரும்… ஒரு பார்ப்பனப் பெண் படுகொலை செய்யப்பட்டால் `பிலால் மாலிக்’தான் அதைச் செய்திருப்பார் எனப் பரப்புவது, இந்நாடு துளி அளவுகூட நாகரிகம் அடையவில்லை, தனது ஆதிகால வன்மங்களில் இருந்து விடுபடவில்லை என்பதற்கு ஆணித்தரமான சாட்சி ஆகிறது.

இங்கு உள்ள படித்த வர்க்கத்துக்கு, தான் வாழும் நாட்டின் அடிப்படைப் பிரச்னை எது எனப் புரிந்துகொள்வதிலும் அல்லது ஏற்றுக்கொள்வதிலும் இருக்கும் சிக்கல் கடும் அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஒரு நாட்டின் ஒருமைப்பாட்டை எது சிதைக்கிறதோ, அதுதான் அந்நாட்டின் அடிப்படைப் பிரச்னையாக இருக்க முடியும் என்பது சமூக விதி. அதன்படி, இந்தியர்களை ஒன்றுசேரவிடாமல் தடுத்துவைத்திருப்பது பல நூற்றாண்டுகாலமாக பிரிவினைவாதத்தைப் போற்றிப் பாதுகாத்துவரும் சாதி அமைப்பும் இந்துமத ஆதிக்கமுமே!

சக மனிதரைச் சமமாகக் கருத அனுமதிக்காத சாதியக் கட்டமைப்பும், சக மனிதர் மீது வன்மத்தைப் பரப்பும் மதவாதமும் இறுகவும் பெருகவும் நவீன வளர்ச்சிகள் அனைத்தையும் வசப்படுத்தி, படித்தவர்கள் பெரும் பங்காற்றுகின்றனர். சாதிய வன்மமும் மதவாதமும் குற்றம் எனக் கற்றுத்தரும் களம் இங்கு இல்லவே இல்லை. அதனாலேயே இந்த நாடு வாழத் தகுதியற்ற ஆபத்தான இடமாக நீடித்துக்கொண்டே இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்