வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

Whatsapp:

``நீங்க புக்ஸ், யூனிஃபார்ம், ஷூ, சாக்ஸ், பெல்ட், எல்லாமே இங்கே ஸ்கூல்லதான் வாங்கணும்!''

``படிப்பு?''

``அதுக்கு வெளியே டியூஷன் வெச்சுக்கங்க!''

Whatsapp:

வாடிக்கையாளர்: சார், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒண்ணு எடுக்கணும். ஆனால், தலையில் இருந்து செருப்பு வரை தெரியணும்... முடியுமா?
கடைக்காரர்: இதெல்லாம் சப்பை மேட்டர். உன்னோட செருப்பை தலையில வெச்சிட்டு நில்லு. சூப்பரா எடுத்திடலாம்!

twitter.com/ksnagarajan:
Whatsapp-ன் தமிழாக்கம் `இன்றென்ன புரளி?'

twitter.com/teakkadai:  மனைவியின் டீன் ஏஜ் புகைப்படம் கணவனுக்குக் கிளுகிளுப்பையும், கணவனின் படம் மனைவிக்கு எரிச்சலையும் தரவல்லது!

twitter.com/oviyachaaral:
அது ஏன் யாராச்சும் சறுக்கிக் கீழே விழுந்தா, உடனே பரிதாபம் வராம, டக்குன்னு சிரிப்புப் பொத்துட்டு வருது நமக்கெல்லாம்?

twitter.com/manipmp:
வாய்ப்பு கிடைச்சவன் டி.வி-யில் பேசுவான்.கிடைக்காதவன், பேசுறவன் பக்கத்துல இருந்து தலையாட்டுவான்!

twitter.com/teakkadai: ஒரு வாட்ஸ்அப் குரூப்பைக் கலைக்க, அதில் ஒரு எம்.எல்.எம் ஆசாமியைக் கோத்துவிட்டால் போதும்!

twitter.com/kanavey: பெண்கள் மீதான குற்றங்களைக் குறைக்க, தேவை ஆன்மிகக் கல்வி - ராமகோபாலன்  # துள்ளியெழுந்து உக்காரும் ஸ்மைலி by நித்தியானந்தா!

twitter.com/yugarajesh2:  `பேய், பூதம், பூச்சாண்டி' வரிசையில் இந்த அம்மாக்கள் ஸ்கூல் மிஸ்ஸையும் சேர்த்துட்டாங்க

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்