தில்லுக்கு துட்டு - சினிமா விமர்சனம்

ன்னொரு பங்களா... இன்னொரு பேய்...இன்னொரு தமிழ்ப் படம்.

மகளின் காதல் பிடிக்காத அப்பா, மாப்பிள்ளையைப் போட்டுத்தள்ள திட்டம் போடுகிறார். `பாழடைந்த பேய் பங்களா ஒன்றில் கல்யாணம் செய்வது எங்கள் ஐதீகம்!' என அங்கே அழைத்துச் சென்று கொல்வதுதான் ப்ளான். வில்லன் செட்டப் செய்யும் டூப் பேய்களுக்கு நடுவில் நிஜ பேயும் கிளம்பிவிட, தெறிக்கிறது கல்யாணக் கும்பல். பெட்டிக்குள் இருந்து கிளம்பிய பேயை, மீண்டும் பெட்டிக்குள் பூட்டுவதுதான் `தில்லுக்கு துட்டு'.

சந்தானம் ஹீரோ ‘சீஸன் 3’ இது. ஓப்பனிங் சாங், சாமி சென்டிமென்ட், ஸ்லிம் பாடி என மாஸ் ஹீரோ ரூட் பிடித்திருக்கிறார். ஆனால், ஸ்கோர் செய்வது என்னவோ பேயையே கலாய்க்கும் ஒன்லைனர் சந்தானம்தான்.

தயவுதாட்சண்யம் பார்க்காமல் தமிழ்ப் படங்களைக் கலாய்த்த `லொள்ளு சபா' ராம்பாலா, வெள்ளித்திரையில் அடக்கி வாசித்திருக்கிறார். சந்தானம் மட்டும் இருந்தாலே காமெடி அன்லிமிட்டெட்தான். ஆனால், இதில் ஒரு லோடு ஆட்களை வைத்துக்கொண்டு சென்னை வெயில் கணக்காகக் காயவிடுகிறார். ஆனந்தராஜும் மொட்டை ராஜேந்திரனும்தான் மார்க் வாங்குகிறார்கள்.

காமெடிக் கூட்டணி, பேய் பங்களாவுக்கு வந்து சேர்வதற்குள் இடைவேளை வந்துவிடுகிறது. அந்த `ஆவ்வ்வ்வ்வ்' முதல் பாதியைத் தாண்டிவிட்டால், கலகலக்கிறது இரண்டாம் பாதி. `கீரைசாதம் சாப்பிட்டு வாயக் கழுவுலையா?', `சின்ன ஜார்ல சட்னி அரைக்கிற மாதிரி சத்தம்' என, பேயிடமே கொடுக்கும் கவுன்ட்டர் எல்லாம் சாட்சாத் சந்தானம் ஸ்பெஷல். யாரோ ஒரு ஹீரோ படத்தில் சந்தானம் டிராக் மட்டும் ரசிக்க முடிவதுபோல, இதிலும் ஹீரோ சந்தானம் வெளிப்படாத இடங்கள் மட்டுமே `குட்'. டப்பிங்கில் பலரின் உதட்டசைவு ஒட்டவே இல்லை.

மெலடி, குத்து என தியேட்டரில் மட்டும் ரசிக்கக்கூடிய இன்னொரு கமர்ஷியல் ஆல்பம் தமனுக்கு. எடிட்டர் கோபிகிருஷ்ணா மனது வைத்திருந்தால் முதல் பாதியை இன்னும் நறுக்கியிருக்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்