காளி ரிட்டர்ன்ஸ்! - இரஞ்சித் சொல்லும் ரஜினி சீக்ரெட்ஸ்

எம்.குணா

‘சரியா மதியம் 4 மணிக்கு வந்துடுங்க சார்...’ என வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பியிருந்தார் `கபாலி' இயக்குநர் பா.இரஞ்சித். ஆனால், 2 மணிக்கே அவசரமாக அழைத்தார். `‘சார் `கபாலி' டபுள் பாசிட்டிவ் பார்த்தேன். படம் சூப்பரா வந்திருக்கு. மகிழ்ச்சியா இருந்தது. அதான் உடனே உங்களைக் கூப்பிட்டேன்’' என உற்சாகமானார்.

``ரஜினி சார் நடிச்சதிலேயே எனக்கு ரொம்பப் பிடிச்சது ‘முள்ளும் மலரும்' படம்தான். அதுல நான் பார்த்த `காளி' கேரக்டரைத்தான் அப்படியே செதுக்கி ‘கபாலி’ ஆக்கி யிருக்கேன்'' - சூப்பர் ஸ்டாரின் படத்தை வெற்றிகரமாக முடித்துவிட்ட முழு திருப்தியோடு பேசுகிறார் இரஞ்சித்.

``ரஜினி, படத்தைப் பார்த்துட்டாரா... என்ன சொன்னார்?''

``அமெரிக்கா செல்வதற்கு முன்னரே முழுப் படத்தையும் பார்த்துட்டார். ‘படம் சூப்பரா வந்திருக்கு. ஒரு டைரக்டரா நீங்க ஜெயிச்சுட்டீங்க’னு என்னை வாழ்த்தினார். தயாரிப்பாளர் தாணு சாருக்கு போன் பண்ணி `நம் நட்புக்கு ஒரு மகுடம்'னு பாராட்டினார். படத்துல நடித்த  ஒவ்வொரு வருடைய நடிப்பையும் பாராட்டிக்கிட்டே இருந்தார். ‘என்னோட வெள்ளைத் தாடி ஸ்கிரீன்ல நல்லா இருக்குல?’ எனக் குறிப்பிட்டுச் சொன்னார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்