‘விவசாயமும் மல்யுத்தமும் ஒண்ணுதான்!’

பரிசல் கிருஷ்ணகுமார்

ஸ்போர்ட்ஸ் படங்கள் என்றாலே பாலிவுட்டுக்கு எக்ஸ்ட்ரா எனர்ஜி வந்துவிடுகிறது. `லகான்', `சக்தே இந்தியா', `பாக் மில்கா பாக்' என இந்த வகை படங்கள் அதிக கவனமும் பாராட்டும் பெறத் தவறுவதே இல்லை. சல்மான் கான் நடிப்பில் வந்திருக்கும் `சுல்தான்' அதே ரகம்தான்.

ஹரியானாவில் தன் தந்தையுடன் மல்யுத்தப் பயிற்சி கொடுத்துக்கொண்டிருக்கும், மல்யுத்த வீராங்கனை அனுஷ்கா ஷர்மா அவரை கைப்பிடிக்கும் ஆசையில் இருக்கும் சல்மானிடம் ‘உனக்குன்னு  ஏதாச்சும் ஒரு லட்சியம் இருக்கா?’ என அனுஷ்கா உசுப்பேற்ற, அவரது அப்பாவிடமே பயிற்சிக்குச் சேர்கிறார். ‘மூணே மாசத்துல நடக்கிற மாநில சாம்பியன்ஷிப்ல நான்தான் ஜெயிக்கப்போறேன்’ என்பவரைப் பரிதாபப்பார்வை பார்க்கும் கோச், அவரது டெடிகேஷனைக் கண்டு வியந்து கற்றுக்கொடுக்க சம்மதிக்கிறார்.

ஒரே பாட்டில் ஏஷியன் கேம்ஸ், காமன்வெல்த் கேம்ஸ், ஒலிம்பிக் என எல்லாவற்றிலும் ஜெயித்துவிட்டு அனுஷ்காவையும் கைபிடித்தவருக்கு, இடைவேளை ப்ளாக்கில் அதிர்ச்சி. துருக்கியில் நடக்கும் உலக சாம்பியன் போட்டியில் ஜெயித்து, குழந்தை பெற்றிருக்கும் மனைவியை ஆசை ஆசையாகப் பார்க்க மெடலுடன் வருபவரை ‘நீ வராதே போ’ என விரட்டுகிறார் அனுஷ்கா. `O-ve' ரத்த வகையைச் சேர்ந்த சல்மானுக்குப் பிறந்த குழந்தை, அதே வகை ரத்தம் கிடைக்காமல் இறந்துவிடுகிறது.

‘நீ இங்கே இருந்திருந்தா காப்பாத்திருக்கலாம். உனக்கு புகழ் போதையாகிடுச்சு’ என அனுஷ்கா விலகிவிட, மல்யுத்தத்தைக் கைவிடுகிறார் சல்மான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்