மர்டர் மிஸ்ட்ரி!

ம.கா.செந்தில்குமார்

‘‘நான் தயாரிச்ச பல படங்கள் ஒரு புள்ளியில் தொடங்கி உருவானதில் இருந்து அந்த இயக்குநர்களுடன் இருந்திருக்கேன். ‘தெகிடி’ போஸ்ட் புரொடக்ஷனில்கூட ‘இப்படி மாத்தலாமா... அந்த சீன் இப்படி வைக்கலாமா?’னு நான் பேசுறதைக் கேட்டு, ‘நீங்க ரொம்ப சீக்கிரத்தில் டைரக்ட் பண்ணுவீங்க’னு முதன்முதல்ல சொன்னது அந்தப் பட இயக்குநர் ரமேஷ்தான். நானும் மனசுல இருந்த ஒரு கதையை அப்பப்ப நண்பர்கள்கிட்ட டிஸ்கஸ் பண்ணுவேன். ‘ஏழெட்டுப் படங்கள் தயாரிச்சுட்டோம். அடுத்து என்ன?’னு யோசிக்கும்போது, அந்தக் கதையை ஸ்கிரிப்டாக்கி நாமே இயக்கினால் என்னனு ஓர் எண்ணம் வந்தது. அப்படித்தான் ‘மாயவன்’ உருவானது'' உற்சாகமாகப் பேசுகிறார் இயக்குநர் சி.வி.குமார். ‘அட்டகத்தி’ படம் தொடங்கி பல வெற்றிப் படங்களைத் தயாரித்தவர். இப்போது ‘மாயவன்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகிறார்.

‘ `மாயவன்' த்ரில்லர் படமா?’’

‘‘ஆமாம்.  இது ஒரு மர்டர் மிஸ்ட்ரி படம். காரணம் தெரியாமல் வரிசையாகக் கொலைகள் நடக்கும். அதைப் பண்றது யார்னு ஆராயும்போது அதுக்குள் நடக்கும் விஷயங்கள்தான் கதை. ஹீரோ, போலீஸ் இன்ஸ்பெக்டர். ஹீரோயின் ஒரு மனநல மருத்துவர்.'’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்