‘வால்’ நட்சத்திரம்

நீமோ

``ஓ  ... அந்தப் பையனா... அவன் முதல் பட சான்ஸ் எப்படி வாங்கினான் தெரியுமா? அவங்க அப்பா பெரிய கோடீஸ்வரர். தன் பையனை எப்படியாவது ஹீரோ ஆக்கிடணும்னு முடிவு பண்ணிட்டார். யாஷ்ராஜ் ஃபிலிம்ஸ்ல புதுமுகங்களை  வெச்சு படம் பண்ணப்போறாங்கனு தெரிஞ்சதும், பத்து கோடி ரூபாயைக் கத்தையா கொடுத்து பையனை ஹீரோவாக்கிட்டார். படமும் ஹிட்டாகிடுச்சு இல்லாட்டி இவன் எல்லாம் எப்படிங்க ஹீரோ ஆகப்போறான்?’’

இன்று வரை பாலிவுட்டில் ரன்வீர் சிங் பற்றி பேசப்படுகிற வதந்தி இது. அவருடைய முதல் படம் `பேண்ட் பஜா பராத்’ வெளியாகி ஆறு ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஆனால், இப்போதும் இந்த வதந்தியை பாலிவுட்டில் யாராவது யாரிடமாவது சொல்லிக்கொண்டிருக் கிறார்கள். அது பொய் என எத்தனையோ முறை ரன்வீர் விளக்கம் சொல்லிவிட்டார். இருந்தும் இன்னமும் இந்தப் பொய் மட்டும் பாலிவுட்டைச் சுற்றுகிறது.

ஆனால் ரன்வீர், அடுத்தடுத்து சூப்பர்ஹிட்கள் கொடுத்து, பாலிவுட்டின் இளம் முகமாக மோஸ்ட் வான்டட் ஹீரோவாக மாறிவிட்டார். இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கே உரிய அத்தனை வால்தனங்களும்கொண்ட பாலிவுட் நியூஜெனரேஷன் நடிகர்களில் ரன்வீர் சிங் இப்போது டாப். கான்கள், கபூர்கள் என வாரிசுகளும் வாரிசுகளின் வாரிசுகளும் அரசாட்சி செய்யும் பாலிவுட்டில் ரன்வீரின் வெற்றி முக்கியமானது. 100 கோடி  ஹீரோ, தீபிகாவின் காதலர் என ரன்வீர் பாலிவுட்டின் ட்ரெண்டிங் ஸ்டார்!

மும்பையில் பிறந்து வளர்ந்தவர் ரன்வீர் சிங். வசதியான குடும்பம். பள்ளியிலும் கல்லூரியிலும் கலை நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டவர், மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்று அங்கேயும் நடிப்பையே படித்திருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்