“நான் ஏன் இவ்வளவு கொடூரமா யோசிக்கிறேன்!”

நா.சிபிச்சக்கரவர்த்தி

``தம்பி... மாரத்தான் ஓட்டத்துல கின்னஸ் சாதனை படைக்கணும்கிற வெறியில இருக்கேன். அதுக்காகத்தான் இப்போ கிரவுண்ட்ல ஓடி பிராக்ட்டிஸ் பண்ணிட்டிருக்கேன். கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனதும் கூப்பிடுறேனே’’ - என்றபடியே லைனில் வருகிறார் சைதாப்பேட்டை ம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன்.

``எனக்குத் தெரியாத கேள்விகளா தேடிப் பிடிச்சுக் கேட்டு கலாய்க்கப்போறீங்க அதானே! ஒரு சின்ன ரிக்வெஸ்ட் ப்ரோ, கொஞ்சம் ஈஸியா கேளுங்க. ஐ யம் பாவம்...’’ - அப்பாவியாக முகத்தை வைத்துக்கொள்கிறார் நடிகர் பால சரவணன்.

``உங்ககிட்ட பாஸ் ஆகுறது ஐ.ஏ.எஸ் எக்ஸாமைவிட கஷ்டமாச்சே. ஒரு மணி நேரம் டைம் தர்றீங்களா? பேப்பர் எல்லாம் கொஞ்சம் படிச்சுட்டு வந்துடுறேனே...’’ - ஆர்வமாகிறார் நடிகர் அஸார்.

``ஹாய்.... இந்த ஜாலி கொஸ்டீன்ஸ் பத்திதான் ஷூட்டிங் பிரேக்ல பேசிப்பாங்க. இப்ப நானே அதுல கலந்துக்கப்போறேனா? வாவ்... கேளுங்க கேளுங்க...’’ - தயாராகிறார் நடிகை நிவேதா பெத்துராஜ்.

`` `உங்களை யாராவது கிண்டல்செய்தாலோ அல்லது துன்புறுத்தினாலோ எனக்கு மெயில் அனுப்புங்கள்' எனச் சொன்ன மத்திய அமைச்சர் யார்?''

விடை: மேனகா காந்தி (மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர்) மெயில் ஐ.டி: gandhim@nic.in

மா.சுப்பிரமணியன்
: ``ஹா... ஹா... சரியாபோச்சு போங்க. பொதுவாகவே தமிழ்நாட்டு அமைச்சர்கள் பேரு யாருக்குமே தெரியாது. அதுல ஒருத்தர் மெயில் ஐ.டி எல்லாம் கொடுத்து இருக்கார்னா ஆச்சர்யமா இருக்கே. ஓகோ... மத்திய அமைச்சரா? அதானே பார்த்தேன். அந்த அம்மாவைக் கேட்காம அந்த குரூப்ல ஒருத்தரும் பேச மாட்டாங்களே. அப்புறம் தம்பி... நான் ஒரு வாரமா ஊர்ல இல்லை. அதனால நியூஸ் அப்டேட்ஸ் சரியா கிடைக்கலை. நீயே பதில் சொல்லிடுப்பா.''

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்