மைல்ஸ் டு கோ... 22

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
இயக்குநர் வெற்றி மாறன், படம்: ஸ்டில் ராபர்ட்

புலி பார்க்கும் ஆர்வத்தில் சக்தி, நண்பர்கள் இரண்டு பேர், ஃபாரஸ்ட் ஆபீஸர் ஒருவர், உதவி இயக்குநர்கள் வர்ஷா, சுரேஷ் ஆகியோருடன் நான் சத்தியமங்கலம் காட்டுப் பகுதிக்குள் பயணம் செய்தேன். சக்திக்கு, அந்தப் பகுதியில் விவசாய நிலம் இருந்தது. `17 வருஷமா காட்டுக்குள் வர்றேன். சிறுத்தைதான் இருக்கும். புலி எல்லாம் இருக்க வாய்ப்பே இல்லைடா' என்றான். அந்தக் காட்டுக்குள் மான்களும் காட்டு முயல்களும்தான் கண்ணில்பட்டன. புலிக்கான தடயமே அங்கு இல்லை. புலியை நாம் ஒருமுறை பார்ப்பதற்கு முன்னர் அது நம்மை நூறு தடவையாவது பார்த்துவிடும். `புலியை நாம் பார்ப்பது இல்லை. அது தன்னைப் பார்க்க நம்மை அனுமதிக்கிறது' என்பார்கள். அந்த அனுமதியை, புலி எங்களுக்கு இன்னும் தரவில்லை என நினைத்தோம். அந்த இடத்தில் இருந்து நகர்ந்து வேறோர் இடத்துக்கு காரில் இறங்கிக்கொண்டிருந்தோம். நான் டிரைவர் ஸீட் பக்கத்தில் அமர்ந்திருந்தேன். அப்போது மஞ்சள் நிறத்தில் பாறைபோல ஓர் உருவம் திடிரென சாலைக்குள் வந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்