இன்பாக்ஸ்

அமெரிக்காவின் விர்ஜினியாவில் உள்ள லோட்டஸ் ஆசிரமத்தில் ஓய்வில் இருக்கிறார் சூப்பர் ஸ்டார். சச்சிதானந்த சுவாமிகளால் தொடங்கப்பட்ட இந்த ஆசிரமத்துக்கு `பாபா' பட சமயத்தில் இருந்து சென்று வருகிறார் ரஜினி. செல்போன், இன்டர்நெட் என இந்த ஆசிரமத்துக்குள் தகவல்தொடர்பு சாதனங்கள் எதற்கும் அனுமதி கிடையாது. முழுக்க முழுக்க அமைதியும் யோகாவும் நிறைந்த இந்த 600 ஏக்கர் ஆசிரமத்துக்குள்தான் ஃபுல் சைலன்ஸில் இருக்கிறார் ரஜினி. அமைதிடா... ஆனந்தம்டா!

தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகவைத்து எடுக்கப்பட்டுவரும் `MS Dhoni: The Untold Story' திரைப்படம் செப்டம்பர் 30-ம் தேதி ரிலீஸ். படத்தின் லேட்டஸ்ட் போஸ்ட்டர் ஒன்று, தோனியின் பிறந்த நாளான ஜூலை 7-ம் தேதி வெளியாகி பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. தோனியாக சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிக்க, சாக்‌ஷியாக கியாரா அத்வானி நடித்திருக்கிறார். தோனியின் அப்பா அனுபம் கெர். படத்தில் யுவராஜ் சிங் கேரக்டரும் உண்டு என்பதுதான் ட்விஸ்ட். தாதாவுக்கும் ஒரு பயோபிக் ப்ளீஸ்!

  ரிட்டையர் ஆகிவிட்டாலும் நான் இன்னமும் கேட்ச் பிடிப்பதில் கில்லிதான் என நிரூபித்திருக்கிறார் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் உசேன். 150 அடி உயரத்தில் இருந்து போடப்பட்ட பந்தை கேட்ச் பிடித்து கின்னஸ் சாதனைப் படைத்திருக்கிறார். முதலில் 100 அடி உயரத்தில் இருந்து போடப்பட்ட பந்தை கேட்ச் பிடித்தார் நாசர் உசேன். அடுத்து உயரம் 150 அடிக்கு இன்கிரீஸ் ஆக... அதையும் பிடித்துவிட 400 அடி உயரத்தில் இருந்து பந்து போடப்பட்டது. ஆனால் மிக உயரத்தில் இருந்து பறந்துவந்த பந்தை அவரால் கேட்ச் பண்ண முடியவில்லை. இருந்தாலும் 150 அடி உயரமே பெரிய சாதனைதான் பாஸ் என கின்னஸ் டீம் சான்றிதழ் கொடுத்துவிட்டது. கேட்சர் உசேன்!

  ஸ்பெயினின் பாம்ப்லோனா நகரில் அதிரிபுதிரியாக நடந்திருக்கிறது காளை விரட்டும் விழா. கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரம்கொண்ட சாலையில் காளைகள் அவிழ்த்துவிடப்படும். சாலையில் தறிகெட்டு ஓடும் காளைகளை அடக்குபவர்தான் வின்னர். முதல் நாளில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காளைகளை அடக்க முயற்சிசெய்ய, இரண்டு பேரை முட்டித்தள்ளி கடுமையாகத் தாக்கியிருக்கிறது ஒரு காளை மாடு. மொத்தம் ஒன்பது நாட்கள் நடக்கும் இந்தத் திருவிழாவைக் காண உலகம் முழுக்க இருந்து ஆயிரக்கணக்கில் பார்வையாளர்கள் திரண்டிருந்தனர். மெமரீஸ் ஆஃப் ஜல்லிக்கட்டு!

  நீங்கள் உட்கார்ந்திருக்கும் காபி ஷாப்பில், அழகான குழந்தை ஒன்று யாருமற்று வந்து உங்கள் அருகில் அமர்ந்தால் என்ன செய்வீர்கள்? ஒரு சிறு முயற்சி எடுத்தேனும், குழந்தையைப் பெற்றோரிடம் கொண்டுசேர்ப்போம். சரி, இதுவே அழுக்குச் சட்டையுடன் இருக்கும் குழந்தை என்றால். காபி ஷாப்பினுள் விட மாட்டார்கள் என்கிறீர்களா? அதைத்தான் யுனிசெஃப் நிறுவனம் ஒரு வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார்கள். அனனோ என்கிற ஆறு வயது சிறுமியை, இரு வேடங்களில் இப்படிச் செல்லவைத்து இருக்கிறார்கள். ஒருகட்டத்தில், வீடியோவில் நடிக்க முடியாமல் அனனோ விலகிவிடுகிறார். `ஏன் எனத் தெரியவில்லை. அழுக்காகச் செல்லும்போது என்னை எல்லோரும் வெளியே போகச் சொல்லித் திட்டினார்கள்' எனச் சோகமாகச் சொல்லியிருக்கிறார் அனனோ `காக்காமுட்டை' கான்செப்ட்!

  கடந்த ஜூன் 4-ம் தேதி ஜூபிடர் கிரகத்துக்கு, ஜூனோ என்ற விண்கலனை அனுப்பி சாதனை செய்திருக்கிறது அமெரிக்காவின் நாசா. அடுத்த 20 மாதங்களில் 37 முறை ஜூபிடரை வலம்வர இருக்கிறது ஜூனோ. ஆகஸ்ட் 5-ம் தேதி 2011-ம் ஆண்டு ஆரம்பித்த பயணத்தை, தற்போதுதான் நிறைவுசெய்ய ஆரம்பித்திருக்கிறது ஜூனோ. அதென்ன ஜூனோ? கிரீக் இதிகாசத்தின்படி, ஜூபிடர் என்னும் கடவுளின் மனைவி பெயர் ஜூனோ. மீண்டும் ஜூனோ!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்