அறம் பொருள் இன்பம் - 8

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
வ.நாகப்பன்

துவரை தங்கத்தில் முதலீடுசெய்ய விரும்புகிறவர்களுக்கு உகந்த முதலீடாக கோல்டு ஈ.டி.எஃப். (Gold Exchange Traded Fund) இருந்து வந்தது.

ஆனால், இந்தத் திட்டத்தில் உள்ள பின்னடைவு... தங்கக் காசுகளைப்போலவே நீண்டகால ஆதாயம் ஒன்று மட்டுமே. இடைக்காலத்தில் இதன் மீது வட்டி வருவாய் ஏதும் கிடைக்காது.

இப்போது அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய திட்டங்களில் வட்டி வருவாயும் உண்டு என்பதால், ஈ.டி.எஃப்-ஐவிட எவ்வளவோ பெட்டர்.

அவை:

1. இந்திய தங்கக் காசுகள்

2. தங்கத்துக்கு ஈடான மாற்றுப் பத்திரங்கள்

3. தங்கப் பத்திரங்கள்


இந்தத் திட்டங்களின் சாதக - பாதகங்கள் என்னென்ன?

1. இந்திய தங்கக் காசு:

தங்கத்திலேயே முதலீடுசெய்பவர்களுக்கான சேமிப்பு இது.

ஒரு பக்கம் அசோகச் சக்கரமும் மறுபக்கம் மகாத்மா காந்தியின் உருவமும் பொறிக்கப்பட்ட, முற்றிலும் தூய்மையான 24 காரட் ( 999 ப்யூரிட்டி)ஹால்மார்க் காசுகள் இவை.

5 மற்றும் 10 கிராம்களில் கிடைக்கின்றன.

20 கிராம் காசு/கட்டிகளும் விற்கப்படுகின்றன.

எம்.எம்.டி.சி., இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கடைகளின் மூலம் இவை விற்கப்படுகின்றன. முழு விவரமும் அரசின் indiangoldcoin.com இணையதளத்தில் கிடைக்கும். விலை கொஞ்சம் அதிகமாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது.

2. தங்க மாற்றுப் பத்திரம்

(Gold Monetization Scheme):


எந்தவித வருமானமும் இல்லாமல் நம் வீட்டில் சும்மா பூட்டிவெச்சிருக்கும்  தங்கத்தை, நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தும்விதமாக அதை வெளிக்கொண்டு வர, சென்ற ஆண்டு மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட திட்டம் இது. நமக்கும் அதில் நிறையப் பலன்கள் உண்டு.

`நம்மகிட்ட அவ்வளவு தங்கம் எங்க சார் இருக்கு?' என்கிறீர்களா... குறைந்தபட்சம் 30 கிராம் தங்கத்தைக்கூட இந்தத் திட்டத்தின் கீழ் டெபாசிட் செய்யலாம். அதாவது சுமார் 4 சவரனுக்கும் குறைவு. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்