வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

twitter.com/indiavaasan: எவ்வளவு பெரிய சாலை விபத்தும், ஐந்து நிமிட வேகக் குறைப்புக்கு மட்டுமே என்றாக்கிவிட்டது வாழ்க்கை ஓட்டம்.

twitter.com/altappu: `ஏழு சரவணன்... ஒரே மீனாட்சி’ - பெண் குழந்தைகளுக்கு கள்ளிப்பால் ஊத்தின சம்முவத்துக்கு இதுவும் வேணும்... இன்னமும் வேணும்.

twitter.com/Sandy_Offfl டெக்னாலஜி தெரியாத பெற்றோர்களைக் கிண்டல் செய்யாதீர்கள். கீரை பேர்கூட என்ன எனத் தெரியாமல்தான் வளர்ந்து கொண்டிருக்கிறோம்.

twitter.com/Aruns212:
அத்தனை வேலைகளையும் இழுத்துப்போட்டுச் செய்யும் அம்மாவைப் பார்த்தே அதிகம் சொல்கிறோம், `போம்மா... உனக்கு வேற வேலையே இல்லை'.

twitter.com/Kozhiyaar :
குழந்தைகளின் திருட்டு முழி, அவர்கள் செய்த தவறைவிட சுவாரஸ்யமாக இருக்கும்.

twitter.com/teakkadai:
தங்களை பணக்காரர்கள் என நினைத்துக்கொள்ளும் நடுத்தர வகுப்பினர்தான், பின்னாளில் ஏராளமான சிரமங்களை அனுபவிக்கிறார்கள்.

twitter.com/devaseema
: `நாளைக்கு லன்ச்-க்கு இட்லி கொடுக்கட்டா செல்லம்?’னா, `பத்து வருஷமா அதுதானம்மா குடுக்குறீங்க’ங்து பொடிசு # அதுக்கு வயசே நாலுதான் ஆவுது.

twitter.com/pshiva475:
இந்திய அரசே... ரயில்வே ஸ்டேஷன்ல மட்டும் இலவச WiFi வசதி செஞ்சுக்கொடுத்தா, `ட்ரெயின் லேட்டா வர்றதைப் பத்தி நாங்க ஏன் கவலைப்படவோ, கம்ப்ளைன்ட் பண்ணவோபோறோம்?’

twitter.com/kurumbuvivek
: 20 ஆயிரம் சம்பளம் வாங்கினப்ப மிடில் க்ளாஸா இருந்த மக்கள், இப்ப 60 ஆயிரம் சம்பளம் வாங்கியும் மிடில் க்ளாஸாவே வெச்சிருக்கிறதுதான் இந்த ஐ.டி துறை.

twitter.com/santhiyagu0009:
`பஸ்களில் ஸீட் பெல்ட்’ - தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் ஆலோசனை. #முதல்ல ஸீட்டுக்கு நாலு போல்டு போடுங்கப்பா... என்னா ஆட்டம் ஆடுது!

twitter.com/vandavaalam:
எங்கே பார்த்தாலும்... யாரைப் பார்த்தாலும் வெயிட் குறைக்கிறதுலேயே குறியா இருக்காங்க.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்