“மகன் மிரட்டிட்டான்!”

நா.சிபிச்சக்கரவர்த்தி, படங்கள்: எம்.உசேன்

‘பென்சில்’ படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் மிரட்டியிருக்கும் ஷாரிக்... ரியாஸ் - உமா தம்பதியின் மகன். ‘‘என்ன ப்ரோ, படம் பிடிச்சிருக்கா... எப்படி நடிச்சிருக்கேன்?’’ - தலையை அசைத்துக் கேட்கும்போதே சின்னதாக ஒரு வில்லத்தனம் தெறிக்கிறது. `பென்சில்' படம் மூலம் பையன் கவனிக்கப்பட்டிருப்பதில், உமா ரியாஸுக்கு அவ்வளவு உற்சாகம்!

“ஸ்கூல் படிக்கும்போதே எனக்கு சினிமாட்டோகிராஃபி மேல ஆர்வம். கேமரா லென்ஸ் வழியா உலகத்தைப் பார்க்கிறது எனக்கு புதிய அனுபவத்தைத் தந்தது. அதனாலேயே மல்ட்டி மீடியா படிக்கிறேன். போட்டோஸ் எடுக்கிறது, உலக சினிமா முதல் உள்ளூர் சினிமா வரை அத்தனை படங்களையும் பார்ப்பது என,  எப்போதுமே விஷுவல்ஸோடதான் இருப்பேன். அம்மா-அப்பாகிட்ட அப்பப்போ சினிமாவைப் பற்றி பேசுவேனே தவிர, `நான் நடிக்கணும்'னு எல்லாம் சொன்னது கிடையாது. அப்பதான் ‘பென்சில்’ படத்துல நடிக்கக் கூப்பிட்டாங்க” என இன்ட்ரோ கொடுத்துவிட்டு அம்மாவைப் பார்த்து சிரிக்கிறார் ஷாரிக்.

“ `பென்சில்’ பட இயக்குநர் மணி நாகராஜ், ஷாரிக்கை வெளியே எங்கேயோ பார்த்திருக்கிறார். ஷாரிக்தான் அவர் கதைக்கான வில்லன் என முடிவெடுத்துவிட்டு வந்து என்னிடம் கதை சொன்னார். `ஆரம்பத்துலயே பையன் அப்படி ஒரு கேரக்டர்ல நடிக்கணுமா?'னு எனக்கு ஒரு சின்ன தயக்கம். எனக்கும் அவங்க அப்பா ரியாஸுக்கும் பையனை ஹீரோவா பார்க்கணும்னுதான் ஆசை. ஆனால் இயக்குநர், ` ‘பென்சில்’ நெகட்டிவ் ரோலாக இருந்தாலும், பெர்ஃபாம் பண்ணக்கூடிய கேரக்டர்’னு ரொம்ப நம்பிக்கையோட சொன்னார். ஷாரிக்கும் கதை கேட்டுட்டு நடிக்க ஆசைப்பட்டான். ஓ.கே சொல்லிட்டோம். `முதல் படமாச்சே, பையன் சுமாராத்தான் நடிப்பான்'னு நினைச்சோம். ஆனா,  மகன் மிரட்டிட்டான்” எனத் தட்டிக் கொடுக்கிறார் உமா ரியாஸ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்