மருது - சினிமா விமர்சனம்

`குட்டிப்புலி', `கொம்பன்' படங்களின் சீக்வெல்லாக வந்திருக்கிறான் `மருது'. அம்மா, மாமனார் சென்ட்டி மென்டைத் தொடர்ந்து இதில் அப்பத்தா.

ராஜபாளையத்தில் மூட்டை தூக்கும் மருதுவுக்கு (விஷால்), அப்பத்தா தான் ஒரே சொந்தம். `நீ மனுஷியே அல்ல... தெய்வம்’ எனப் பாசப்படையல் வைக்கும் பேரன், அப்பத்தா சொன்னதற்காக ஸ்ரீதிவ்யாவைக் காதலிக்கிறார். ஸ்ரீதிவ்யாவுக்கும், எம்.எல்.ஏ-வாக ஆகத் துடிக்கும் ரௌடி ஆர்.கே.சுரேஷுக்கும் ஒரு பிரச்னை. இதற்கு இடையே அப்பத்தா ஆசியோடு விஷால் வர, ஆரம்பிக்கிறது ஆக்‌ஷன்மேளா. ஸ்ரீதிவ்யாவுக்கும் - ஆர்.கே.சுரேஷுக்கும் என்ன பிரச்னை? அப்பத்தா ஏன் விஷாலிடம் ஸ்ரீதிவ்யாவைக் காதலிக்கச் சொன்னார் போன்ற இடைவேளை ட்விஸ்ட்களுக்குப் பதில் சொல்லி முடிகிறது படம்.

சிலரிடம் ஒரே ஒரு கதை இருக்கும். அதையே மீண்டும் மீண்டும் படமாக்குவார்கள். இயக்குநர் முத்தையாவிடம் இருப்பது ஒரே ஒரு கேரக்டர். அவர்களுக்கு வரும் பிரச்னைகளை மட்டும் மாற்றி புது ஸ்டிக்கர் ஒட்டிவிடுகிறார். ஹீரோவையும் சாதிப் பின்னணிக் களத்தையும் மாற்றாமல், இன்னும் எத்தனை நாளைக்கு ஓட்ட முடியும் பாஸ்?

`மதுர மருது’ என்பதை மட்டும் கேட்டு ஓ.கே சொல்லியிருப்பாரோ விஷால்? முறுக்கிக்கொண்டு சுற்றும் பாடிலாங்வேஜோடு திரிகிறார். ஆனாலும் விஷால் இதற்கு பக்கா ஃபிட். ஸ்ரீதிவ்யாவுக்கு கிராமத்து ஹீரோயின் வேலைதான். அப்பத்தாவாக நடித்திருக்கும் மலையாளப் பாட்டி லீலா நடிப்பில் டெரர்; ஆனால், டப்பிங்கில்தான் ஏகப்பட்ட எரர். பயில்வான் ராதாரவி, ஆர்.கே.சுரேஷ் இருவரின் பில்ட் அப்கள் அதிகம்.

 இடைவேளை ப்ளாக் ட்விஸ்ட்டும், பாட்டியை சித்தமருத்துவ முறைப்படி கொல்வதும் `அட’ ரகம்தான். ஆனால், படம் தொடங்கியதுமே,  `அவன் பொறப்பச் சொல்லவா? சிறப்பச் சொல்லவா?’ என விஷாலின் பெருமையைப் பேசுவதில் ஆரம்பித்து, `எனக்கு அப்பாவும் அவதான்... ஆத்தாவும் அவதான். அதனாலதான் அவள `அப்பத்தா’னு கூப்புடுறேன்’ என கடைசியில் கண் கலங்குவது வரை  அனைவரும் அனைத்திலும் பன்ச் பேசி வெறுப்பேற்றுகிறார்கள். `என் பேரன் நினைச்சா எந்தப் பதவியிலேயும் அவனே போய் உட்கார்ந்துக்கிருவான், கூட நாலு பேரோட...’ என நடிகர் சங்கப் பஞ்சாயத்தை உள்ளே கொண்டு வந்திருப்பதில் இருந்த கவனத்தை, கதை எழுதும்போதும் காட்டியிருக்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்