உறியடி - சினிமா விமர்சனம்

லைவாங்கக் காத்திருக்கும் சாதியையும் பகையையும் முறியடிக்கும் சில நண்பர்களின் திகீர் பக்கங்கள்தான் `உறியடி’. மாறிவரும் சினிமாவில், இது  ஒரு முக்கியமான முயற்சி.

எதிர்காலம் குறித்த கவலை இல்லாமல் மது, புகை எனச் சுற்றும் நான்கு கல்லூரி இளைஞர்கள், அதே கல்லூரியில் படிக்கும் போலி சாராய வியாபாரியின் மகன், சாதித் தலைவர் சிலையை வைத்து அரசியல் செய்யும் சாதிச் சங்கம்... இந்த மூன்று பின்புலன்களும் இணையும் புள்ளி...வன்முறை. அது எப்படி, எவர் எவர் வாழ்க்கையைச் சிதைக்கிறது என்பதை, குரூரம் குறையாமல் சொல்லியிருக்
கிறார்கள்.

செல்லுலாய்டு நேர்த்திக்குத்தான் பணம் தேவை. நல்ல ஸ்கிரிப்ட் எழுதத் திறமை போதும் எனச் சொல்லி அடித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் விஜய் குமார். யாரையும் ஹீரோ, வில்லன் என முன்னிறுத்தாமல் சூழலை மட்டும் சொல்லிச் செல்லும் லாகவத்துக்கு வாழ்த்துகள் சகோ. ஒருசில சாதிச் சங்கங்கள் செய்யும் அடாவடியை மட்டுமே காட்டாமல், அது கட்சியாக உருவாவதன் பின்னணியையும் காட்டியது செம தில். இடைவேளைக்குப் பிறகு சற்று சறுக்கினாலும், மொபைலை எடுக்கக்கூட விடாத விறுவிறு திரைக்கதை படத்தின் ப்ளஸ். கொஞ்சமே கொஞ்சம் என்றாலும் காதல் எபிசோடும் மான்டேஜ் பாடலும் அழகு.

மைம் கோபியைத் தவிர தெரிந்த முகங்கள் மிக மிகக் குறைவு. ஆனால், தாபா கேஷியர் தொடங்கி சைக்கோ வரை எல்லா கேரக்டர்களுக்கும் நச் காஸ்டிங் பிடித்ததிலேயே, படம் பாதி ஜெயிக்கிறது. விஜய்குமார், சந்துரு, ஜெயகாந்த், குவாட்டராக நடித்திருக்கும் சிவபெருமாள், வில்லன் சுருளி என அனைவரின் நடிப்பிலும் அவ்வளவு இயல்பு.

தாபாவே மாணவர்களை நம்பித்தான் இருக்கிறது என்கிறார்கள். ஆனால், ஹீரோ கேங்கைத் தவிர அங்கே வேறு மாணவர்களையே பார்க்க முடியவில்லை. அடிதடி நடந்தாலும், லாட்ஜில் கொலையே நடந்தாலும் போலீஸைப் பார்க்கவே முடியவில்லை என்பதுதான் சோகம். தியேட்டர் வரை அடிக்கிறது மதுவின் வீச்சம். அதைக் குறைத்திருக்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்