மிரட்டும் மருத்துவ நுழைவுத் தேர்வு!

பாரதி தம்பி

மீண்டும் ஒரு நுழைவுத் தேர்வு சர்ச்சை தேசிய அளவில் வெடித்திருக்கிறது. மருத்துவப் படிப்புக்கு தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், மருத்துவப் படிப்புக்கு ப்ளஸ் டூ மதிப்பெண்ணை அடிப்படையாகக் கொண்டுள்ள தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு, இந்த ஓர் ஆண்டு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மறுபடியும் அடுத்த ஆண்டு இந்தப் பிரச்னை பெரிய அளவில் வெடிக்கக்கூடும். இந்த விவகாரம் தமிழக மாணவர்களின் மருத்துவ உயர் கல்வியைக் கடுமையாகப் பாதிக்கும் என்ற வாதம் கல்வியாளர்களால் முன்வைக்கப் படுகிறது. என்னதான் நடக்கிறது மருத்துவ நுழைவுத் தேர்வு விவகாரத்தில்?

‘நீட்’ ( NEET- National Eligibility cum Entrance Test)  என்பது 2013-ம் ஆண்டில் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட, மருத்துவப் படிப்புக்கான புதிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுமுறை. இதன்படி இந்தியா முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., எம்.டி. மற்றும் எம்.எஸ்... ஆகிய மருத்துவப் படிப்புகளைப் படிக்க, இந்த நுழைவுத் தேர்வில் பங்கேற்று அந்த மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே ஸீட் ஒதுக்கப்படும். ஆங்கிலம் மற்றும் இந்தியில் தேர்வு நடைபெறும் இந்த நுழைவுத் தேர்வு சி.பி.எஸ்.இ சிலபஸை அடிப்படையாகக் கொண்டது. இந்த அறிவிப்பு இந்தியா முழுக்க கடும் சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறது.

தமிழ்நாடு, கர்நாடகா, மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் சி.பி.எஸ்.இ சிலபஸ் அல்லாத தனித்த பாடத் திட்டத்தைக் கொண்டுள்ளவை. இந்த மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் இனிமேல் சி.பி.எஸ்.இ முறைப்படி அமைந்த நுழைவுத் தேர்வில் பங்கேற்றால்தான் மருத்துவப் படிப்புக்கே செல்ல முடியும் என்பது மிகப்பெரிய அநீதி என்று எதிர்ப்புகள் எழுந்தன. இதைத் தொடர்ந்து, ‘நீட்’ பொது நுழைவுத் தேர்வு முறையை ரத்துசெய்யக்கோரி மொத்தம் 115 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதை விசாரித்த நீதிமன்றம், ‘ ‘நீட்’ நுழைவுத் தேர்வு, சட்ட விரோதமானது மற்றும் அரசியல் சட்ட சாசனத்துக்கு எதிரானது’ என்று கூறி தள்ளுபடி செய்தது. இந்த நிலையில்தான் அதே உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, கடந்த ஏப்ரல் 11-ம் தேதி, ‘நீட்’ தேர்வுக்கு அனுமதி அளித்துள்ளது. மறுபடியும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கடும் எதிர்ப்பு எழவே... இந்த ஓர் ஆண்டு மட்டும் நுழைவுத் தேர்வில் இருந்து விலக்கு அளித்து அவசரச் சட்டம் ஒன்று இயற்றப்பட்டுள்ளது. இந்த அவசரச் சட்டத்துக்குத் தடை கேட்டு ஒருவர் மனு தாக்கல் செய்ய... அதையும் ரத்துசெய்திருக்கிறது நீதிமன்றம். இறுதியாக... ‘நீட்’ நுழைவுத் தேர்வு என்பது, தமிழகம் உள்ளிட்ட தனித்த பாடத் திட்டத்தைப் பின்பற்றும் மாநிலங்களுக்கு, இந்த ஆண்டு கிடையாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அடுத்த ஆண்டு முதல் இந்த நுழைவுத் தேர்வு உண்டு.

இது என்ன மாதிரியான சிக்கல்களை ஏற்படுத்தக் கூடும்? கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் பேசினேன்.

‘‘ ‘நீட்’ நுழைவுத் தேர்வு என்பது மாணவர்களின் தகுதியைத் தீர்மானிப்பதற்காக நடத்தப்படுவதாகச் சொல்கிறார்கள். அப்படியானால் மேல்நிலைக் கல்வி தகுதி இல்லாததா? 10-ம் வகுப்பையும், 12-ம் வகுப்பையும் ஒரே தட்டில்வைத்துப் பார்க்க முடியாது. 10-ம் வகுப்பு வரையிலும் எல்லாப் பாடங்களையும் படிக்கின்றனர். 11-ம் வகுப்பு செல்லும்போதே, குறிப்பிட்ட ஒரு பாடத்தைத் தேர்வுசெய்து அதை ஒட்டியவற்றைத்தான் படிக்கின்றனர். அதில் தேர்வுபெற்றுதான் அவர்கள் உயர் கல்விக்கு வருகின்றனர். அப்படி இருக்கும்போது, மீண்டும் ஒரு தகுதித்தேர்வு என்பது அவசியம் இல்லாதது; நியாயமற்றது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்