கூகுளோடு விளையாடு!

கார்க்கிபவா

லகின் முதல் வாய்ஸ் கமாண்ட் எது எனத் தெரியுமா? அரண்மனையில் ஹாயாக அமர்ந்திருக்கும் மன்னன் ‘யாரங்கே...’ எனச் சொன்னதும் 10 பேர் ஓடி வந்து நிற்பார்களே... அதுவாக இருக்குமோ!
உலகின் முதல் பாஸ்வேர்டு எது தெரியுமா? 1950-களில் வந்த ஒரு படத்தில், ஹீரோ ஒரு குகையின் முன் நின்று, `அண்டா கா கசம்... அபு கா ஹூக்கும்... திறந்திடு சீசேம்’ எனச் சொன்னதும் கதவு திறக்குமே... அதுவாக இருக்குமோ!

இந்த இரண்டு அரசகாலக் காட்சிகளிலும் ‘ஆக்‌ஷன்’ என்பது மனிதர்களால்தான் நடக்கிறது. ஓடி வரும் சேவகன்தான் அரசன் சொன்னதைச் செய்வான். பாஸ்வேர்டைக் கேட்டதும் உள்ளிருக்கும் அடிமைகள் சக்கரத்தைச் சுற்றச் சுற்ற கதவு திறக்கும். மனிதர்கள் இருக்கும் அந்த இடத்தில் மெஷின் வந்துவிட்டால், அதுதான் `ஸ்மார்ட் காலம்’. இந்த ஸ்மார்ட் யுகத்தை ஆளும் கூகுள் நிறுவனத்தின் அடுத்த அதிரடி தயாரிப்பான ‘கூகுள் ஹோம்’தான் சமீபத்திய ஆன்லைன் சென்சேஷன்.

கூகுள் ஹோம்? நாம் சொல்வதைக் கேட்டு, அதற்குத் தேவையான தகவல்களை கூகுளின் மற்ற சேவைகளில் தேடி நமக்குப் பதிலாகத் தரும் ஒரு தானியங்கு சேவைதான் ‘கூகுள் ஹோம்’.
காலையில் எழுந்தவுடன் பாத்ரூமில் பல் துலக்கிக்கொண்டே `இன்னைக்கு மழை வருமா?' என்றால், உடனே கூகுள் வெதரில் என்ன அப்டேட் இருக்கிறது என்பதைத் தேடி, `நல்ல மழை இருக்காம்...

குடையை மறக்காதீங்க' என பதில் சொல்லும். டிரெஸ்ஸிங் ரூமுக்கு வந்து சட்டையை மாட்டிக்கொண்டே `யார் யாருக்கு இன்று அப்பாயின்ட்மென்ட் கொடுத்திருக்கிறேன்?’ எனக் கேட்டால், கூகுள் கேலண்டரில் தேடி, அவர்கள் பெயரைச் சொல்லும். டைனிங் டேபிளுக்கு வந்து ‘இன்று என் டயட் என்ன?’ என்றால் அதையும் சொல்லும். மாலை வீடு திரும்பியதும், ‘ `ஜித்து ஜில்லாடி...' பாட்டைப் போடுப்பா’ என்றால் உடனே தேவா பாடத் தொடங்குவார். உங்கள் வீட்டில் எந்த இடத்தில் இருந்தும், என்ன கேட்டாலும் தேடிப்பிடித்துப் பதில் சொல்லிவிடும் கூகுள் ஹோம். எப்படி?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்