வார்னரின் வின்னிங் ஷாட்!

பு.விவேக் ஆனந்த்

ரோலர் கோஸ்டர் பயணம்போல நடந்து முடிந்திருக்கிறது ஐபிஎல்-2016. கோஹ்லி, கெய்ல், டிவில்லியர்ஸ் எனப் பல கோலியாத்களைக்கொண்ட பலமான அணியாக இருந்தும், `டேவிட்' வார்னரின் கவண்கல்லால் வீழ்ந்திருக்கிறது பெங்களூரூ அணி.

கோஹ்லியின் ஓவர் கான்ஃபிடன்ஸ்

மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தும் பெங்களூரூ அணியால் கோப்பையை வெல்ல முடியாமல்போனதற்கும், ஹைதராபாத் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்ற இரண்டாவது முறையே மீண்டும் கோப்பையை வெல்லவும் கேப்டன்களே முதல் காரணம். பேட்டிங்குக்கு கெய்ல், டிவில்லியர்ஸ், பெளலிங்கில் வாட்ஸன், ஜோர்டன், சாஹல் என இதற்கு மேல் ஒரு ஸ்ட்ராங்கான டீம் எந்த கேப்டனுக்காவது அமையுமா எனப் பொறாமை கொள்ளவைக்கும் லைன்அப்பைக் கொண்டிருந்தது பெங்களூரு. அப்படி இருந்தும் ஏன் இந்தச் சொதப்பல்?

கடந்த எட்டு ஆண்டுகளில் டி-20 போட்டிகளில் ஒரு சதம்கூட அடித்திடாத கோஹ்லி, இந்த முறை ஒரே தொடரில் நான்கு சதங்களை விளாசினார். ரன் மெஷின்போல விளையாடிய விராட் கோஹ்லி, இறுதிப்போட்டியிலும் அரை சதம் அடித்தார். ஆனால் கேப்டனாக, அவர் பல தவறான முடிவுகளை எடுத்தார்.

இறுதிப்போட்டிக்கு முந்தைய நாள் பெங்களூரூவில் மழை. அதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் ஃபீல்டிங்கைத்தான் தேர்ந்தெடுக்கும் என்பது எதிர்பார்ப்பு. ஆனால், டேவிட் வார்னர் `நாங்கள் முதலில் பேட் செய்கிறோம்' என்றார். `வார்னர் `முதலிலேயே பேட்டிங்தான் செய்யப்போகிறோம்' எனச் சொல்லியிருந்தால், நான் டாஸ் போடக்கூட வந்திருக்க மாட்டேன்' எனக் கிண்டலடித்தார் கோஹ்லி. ஈரப்பதம் காரணமாக முதலில் பேட்செய்வது கடினம் என நினைத்தார். ஆனால் வார்னர், யுவராஜ், பென் கட்டிங் மூவருமே சிக்ஸர்களால் பெங்களூரு பெளலர்களைத் துவைத்து எடுக்க, பெளலர்களை சரியான நேரத்தில் ரொட்டேட் செய்ய முடியாமல் தடுமாறினார் கோஹ்லி.

வாட்ஸனை ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள் நொறுக்கிக்கொண்டிருக்க, தொடர்ந்து அவருக்கே ஓவர்களை வழங்கினார். பெங்களூரூ அணியில் எக்கானமி ரேட் குறைவாகக்கொண்ட பெளலர் ஸ்டூவர்ட் பின்னி. ஒரு ஓவருக்கு 7.88 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுக்கும் ஸ்டார் பெளலர் அவர். ஆனால், பின்னிக்குக் கடைசி வரை ஒரு ஓவர்கூட கோஹ்லி வழங்கவில்லை. எவ்வளவு ரன்கள் எடுத்தாலும் சேஸிங்கில் அடித்துவிடலாம் என்ற ஓவர் கான்ஃபிடன்ஸை கோஹ்லியின் முகத்தில் பார்க்க முடிந்தது. அதனால்தான் பெளலர்களை உடனுக்குடன் மாற்றவும், ஃபீல்டிங் வியூகத்தை மாற்றி அமைக்கவும் கோஹ்லி மெனக்கெடவே இல்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்