வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

twitter.com/arattaigirl: நாலு நாள் நம்ப வீட்ல சொந்தக்காரங்க வந்து தங்கிட்டு, கிளம்பிப் போறப்பதான்... சுதந்திர இந்தியாவோட சந்தோஷம் எப்படி இருந்திருக்கும்னு புரியுது!

twitter.com:/teakkadai
: கடன் கேட்கப் போன வீட்டு காமெடி சேனல்ல வடக்குப்பட்டி ராமசாமி காமெடி ஓடுறது எல்லாம், எனக்குன்னே உருவான டிசைன்போல!

twitter.com/udaya_Jisnu: டெய்லி 300 ரூவா வாங்கினா கூலி, மாசம் 9,000 ரூவா வாங்கினா சம்பளம்!

twitter.com/altaappu: ஒரு ஈ என்னையே சுத்திச் சுத்திவந்துச்சு, ‘என்னோட பழைய காதலியா இருக்குமோ?’னு மனைவியிடம் சொன்னேன். மிதிச்சே கொன்னுட்டா!

twitter.com/gowtwits: நெட் தமிழன் கல்லறையில் எழுதிய வாசகம்... `தயவுசெய்து இங்கே WiFi-ஐ ஆன் செய்துவிடாதீர்கள்,  இவன் எழுந்து ட்வீட் போட ஆரம்பித்துவிடுவான்'!

twitter.com/iamVariable:
`கடைக்குப் போயிட்டு வா’னு சொன்னாக்கூட, பேசாமப் போவோம். `சும்மாதானே இருக்க, கடைக்குப் போயிட்டு வா’னு சொல்லும்போதுதான் எரிச்சல் வரும்!

twitter.com/Ramya_muralii: சமையல் ஒரு ஆர்ட்தான். சில நேரங்களில் நம்ம அறியாம மாடர்ன் ஆர்ட் உருவாகிடுது #தட் சோறு வெச்சுட்டேன். ஆனா, பேரு வெக்கல மொமன்ட்!

twitter.com/vandavaalam:  டிக்கெட் புக் பண்ணாம, ஊருக்கு பஸ் ஏறிய கடைசித் தலைமுறை நாம்!

twitter.com/indirajithguru: என் அம்மாவுக்கு என்னைவிட நன்றாகப் பொய் சொல்லவரும் என்பதே, எனக்கு பெண் பார்க்கப் போகும்போதுதான் தெரியும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்