கொஞ்சம் இலக்கியம்... நிறைய உரையாடல்!

அதிஷா, படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், தி.குமரகுருபரன், மீ.நிவேதன்

ப்போதும் ஜிலுஜிலு ஜனவரியில் நடக்கும் சென்னை புத்தகச் சந்தை, இந்த ஆண்டு கோடையில் வந்துவிட்டதால் அரங்கத்துக்குள் நுழைவது என்பது உருக்கு ஆலைக்குள் நுழைவதைப்போலவே இருந்தது. ‘நெருப்புடா..!’ என ஆங்காங்கே மக்கள் கதறிக்கொண்டிருந்த ஒலி, காதில் ரீங்காரமிட்டபடி இருந்தது. வியர்வையில் தொப்பலாக நனைந்துதான் அத்தனை வாசகர்களும் சுற்றிக்கொண்டிருந்தனர். அத்தனை ஈரத்திலும் `சுடச்சுட' புத்தகங்கள் வாங்குவதில் யாருக்கும் சோர்வு இல்லை.

எங்கும் எண்ணற்ற வீடியோ கேமராக்களை காண முடிந்தது. ஸ்ருதி டி.வி, முகில் டி.வி என சாமானியர்களின் யூ டியூப் டி.வி-க்கள் குவிந்துவிட்டன. எங்கு பார்த்தாலும் யாராவது மைக் பிடித்து ‘ஹருகி முராகமி மாதிரி லைட் ரீடிங் புக்ஸ்தான் வாங்கினேன்.

ஐ டோன்ட் ரீட் தமிழ் இலக்கிய புக்ஸ்... ஸாரி’ என்பதுபோல கருத்து முத்துக்களைச் சிதறவிட்டனர்.

  பெரிய ஃபுட் கோர்ட்டில் எப்போதும் போலவே குழிப்பணியாரம் மணமணத்தது. கண்காட்சியைவிட அங்குதான் கூட்டம் கும்மியடித்தது. புத்தகக் கடைகள் எல்லாம் காற்று வாங்கிய வேலைநாட்களில்கூட எங்கு இருந்துதான் இத்தனை பேர் இந்தச் சாப்பாட்டுக் கடைக்கு படையெடுக் கிறார்கள் என்ற கேள்வி ஆய்வுக்குரியது.

  இந்தப் புத்தகச் சந்தையில் தன் முதல் அடியை எடுத்துவைத்திருக்கிறது `விகடன் தடம்'. எந்நேரமும் நான்கைந்து இலக்கியவாதிகள் கூடி விவாதிக்கும் இடமாக `தடம்' ஸ்டால் மாறி இருந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்