மைல்ஸ் டு கோ... 17

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
இயக்குநர் வெற்றி மாறன், படம்: ஸ்டில் ராபர்ட்

`பொல்லாதவன்' ரிலீஸுக்கு முன்னரே படத்தின் மீது வியாபார ரீதியிலான ஓர் எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு முக்கியக் காரணம், எனக்குப் பிடிக்காத `பொல்லாதவன்' டைட்டில். அடுத்த காரணம், ரிலீஸுக்கு முன்னர் வந்த விளம்பரங்கள். `பொல்லாதவன்' இசை வெளியீட்டின்போதுதான், 20 செகண்ட் டீஸர் தமிழ் சினிமாவுக்கு முதன் முதலாக அறிமுகமானது. கே டி.வி., சன் மியூஸிக் சேனல்களில் தினமும் 40 முறை விளம்பரப்படுத்தப்பட்டது. ஹன்ஸ்ராஜ் சக்ஸேனாவின் அந்த ஐடியா, படத்துக்கு நல்ல ரீச் கொடுத்தது. `பொல்லாதவ'னையும் என்னை ஓர் இயக்குநராகவும் மக்களிடம் கொண்டு சேர்த்ததில் சன் டி.வி-க்கும் ஹன்ஸ்ராஜ் சக்ஸேனாவுக்கும் மிகப் பெரிய பங்களிப்பு உண்டு. `ஆடுகளம்' படத்தை, ஒரு வணிகப்படம் அளவுக்குப் பெரிய அளவில் மார்க்கெட் செய்தது சன் டி.வி-யின் பலம். `விசாரணை'யின் சர்வதேச அங்கீகாரத்தை மக்களிடம் முதலில் எடுத்துச் சென்றதும் சன் டி.விதான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்