பேய் எல்லாம் சும்மா இல்லை!

கார்த்தி

மீண்டும் கான்ஜுரிங் ஜூரம். 1977-ம் ஆண்டில் ஹாட்ஜ்ஸ்ன் என்பவரது குடும்பத்தில் நடந்த அமானுஷ்ய நிகழ்வுகளை வைத்து தி கான்ஜுரிங் 2-வை எடுத்திருக்கிறார்கள்.

கொடூர ஆயுதங்கள், பயமுறுத்தும் விஷுவல் எஃபெக்ட்ஸ், மேக்கப் பேய்கள், அச்சுறுத்தும் இசை போன்றவற்றை அடக்கிவிட்டு, கதையில் கவனம் செலுத்தியதால்தான் 20 மில்லியன் டாலரில் உருவான `தி கான்ஜுரிங்' திரைப்படம், 318 மில்லியன் டாலர்களை அள்ளியது. அதை இரண்டாம் பாகத்திலும் செவ்வனே செய்திருக்கிறார் இயக்குநர் ஜேம்ஸ் வான்.

லண்டனில் கணவனைப் பிரிந்து குழந்தைகளுடன் வசித்துவருகிறார் பெக்கி ஹாட்ஜ்ஸ்ன். பெக்கியின் வீட்டில் அமானுஷ்ய நிகழ்வுகள் நிறைய நடக்கின்றன. அவரது 11 வயது இளைய மகள் ஜேன்ட் ஹாட்ஜ்ஸ்னுக்குப் பேய் பிடிக்கிறது. விஷயம் பேய்த்தனமாக ஊர் முழுவதும் பரவ, வீட்டைக் காலிசெய்து வேறு வீட்டில் குடிபெயர்கிறார்கள். ஹட்ச் நாய் போல், பேயும் கூடவே வருகிறது.

சிறுமிக்கு உண்மையிலேயே பேயால் பிரச்னை இருக்கிறதா, இல்லை நடிக்கிறாளா என்பதைக் கண்டறிய அங்கு இருக்கும் சர்ச் நிர்வாகம் பேய் ஓட்டும் ஸ்பெஷலிஸ்ட்டான வாரன் தம்பதிக்கு (எட், லொரைய்ன்) அழைப்பு விடுக்கிறார்கள். கணவர் எட்டை, ஒரு பேய் கொல்லப் போகிறது என்பதை முன்னரே கணிக்கும் லொரைய்ன், முதலில் தயங்குகிறார். பின்னர் இருவரும் லண்டனுக்கு விரைகிறார்கள். சிறுமி சொல்வது உண்மையா, பேயைக் கண்டுபிடித்து, சிறுமியைக் காப்பாற்றினார்களா... என்பதோடு முடிகிறது திரைப்படம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்