அர்த்தமுள்ள மாற்றம் ஆரம்பம்!

அதிஷா, படங்கள்: கே.குணசீலன்

ஞ்சாவூர் மாவட்ட கருவூலத்துக்கு தனது உறவினரைப் பார்ப்பதற்காக ராஜேந்திரன் சென்றார். அன்றைய தினம் கருவூலத்தில் நிறையக் கூட்டம். நூற்றுக்கணக்கான முதியவர்கள் வெயிலில் வரிசையில் நின்றிருந்தனர். அத்தனை பேரும் முன்னாள் அரசு ஊழியர்கள். ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை கருவூலத்துக்கு நேரில் வந்து கையொப்பம் இடவேண்டும், வரத் தவறினால், ஓய்வூதியம் கிடைக்காது. வெயில் காலத்தில் வைக்கப்பட்டிருக்கிற இந்த நேர்காணலுக்கு வந்திருந்த ஒவ்வொருவருடைய முகத்திலும் அத்தனை சோர்வு.

ஓய்வுபெற்ற பேராசிரியர்கள், காவல் துறை அதிகாரிகள், அரசு மருத்துவர்கள், அதிகாரிகள் என எல்லோருமே சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருந்தவர்கள். ஆனால், அத்தனை பேரும் குடிக்கக்கூட தண்ணீர் கிடைக்காமல் கவலையோடு காத்திருந்தனர். முதியவர்கள் ஒவ்வொருவரும் அவர்களுடைய வயதுக்கான, அனுபவத்துக்கான, வகித்த பதவிக்கான மரியாதைகூட இல்லாமல் கால்கடுக்கக் காக்கவைக்கப்பட்டனர்; ஊழியர்களின் கடுமையான அர்ச்சனைக்கும் கடும்சொல்லுக்கும் உள்ளாகினர்.

 80-90 வயதுள்ள அந்த வயதான மனிதர்களை அப்படி ஒரு நிலையில் பார்த்தது, ராஜேந்திரனுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. அவரால் அதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவரது உறவினரிடம், `ஏன் இப்படி?, இதை எல்லாம் யாரும் கேட்க மாட்டீர்களா?' என்று கோபமாக விசாரித்தார். உறவினரோ, `இங்கே எல்லாம் இப்படித்தான், எதையும் சரிசெய்ய முடியாது' என்று விரக்தியாக பதில் சொல்லியிருக்கிறார். ராஜேந்திரன், கருவூல அதிகாரியைச் சந்திக்க முயற்சிசெய்தார். ஆனால், அவரைச் சந்திப்பது அத்தனை எளிதானதாக இல்லை. சீட்டு எழுதிக் கொடுத்துவிட்டு மணிக்கணக்கில் காத்திருந்தால், அதிகாரி பிரியப்பட்டால் சந்திப்பார் என்பதுதான் நிலைமை என்பதைப் புரிந்துகொண்டார். அந்த நொடியில் ராஜேந்திரன் முடிவெடுத்தார்... `இதே அலுவலகத்துக்கு கருவூல அதிகாரியாக ஆகவேண்டும்.'

தடாலடியான முடிவுதான். இருந்தாலும் ராஜேந்திரன் அதற்காக அடுத்த நான்கு ஆண்டுகள் உழைக்கவேண்டியிருந்தது. இன்று அதே தஞ்சாவூர் அலுவலகத்தில் கருவூலத் துறை அதிகாரியாக இருக்கிறார். எந்த அலுவலகத்தை மாற்ற வேண்டும் என விரும்பினாரோ... அங்கே தான் விரும்பிய அத்தனை மாற்றங்களையும் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். ஓர் அலுவலகத்தை அன்பான, நேர்மையான, வந்தோர் வாழ்த்தும் இடமாக மாற்றிக்காட்டியிருக்கிறார். நம்முடைய அரசு அலுவலக நடைமுறையில் இது மிகப் பெரிய சாதனை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்