“‘லா நினா’-வால் பிரச்னை இல்லை!”

கார்க்கிபவா, படம்: அருண் டைட்டன்

சென்னை பெருமழையின்போது வாட்ஸ்அப்பில் வைரலாகப் பரவிய வார்த்தை `எல் நினோ'. `டிசம்பரில் எல் நினோவால்தான் அவ்வளவு மழை பெய்தது. இப்போது `லா நினா' வரப்போகிறது. உஷார்... உஷார்...' என மீண்டும் ஃபார்வேர்டுகள் புயலாகப் பறக்கின்றன. மே மாதம் இரண்டு நாள் மழை பெய்தால்கூட வெள்ளம் வந்துவிடுமோ என்ற அச்சம் சென்னையின் ஒரு கோடிப் பேருக்கும் ஏற்பட்டிருக்கிறது.

இரட்டைக் குழந்தைகளின் பெயர்போல இருக்கும் இந்த எல் நினோ, லா நினா என்றால் என்ன?

ஸ்பானிய மொழியில் `எல் நினோ' என்றால் `சின்னப் பையன்' என அர்த்தம். `லா நினா' என்றால் ‘சின்னப் பெண்’ என அர்த்தம்.

பசிபிக் பெருங்கடலில் குறிப்பிட்ட ஓர் இடத்தில் கடல் மட்டத்துக்கு மேல் சராசரி வெப்பநிலை 0.4 டிகிரிக்கும் அதிகமாக உயர்ந்தால், அதை `எல் நினோ' என்கிறார்கள். எந்த அளவுக்கு வெப்பநிலை கூடுகிறதோ, அந்த அளவுக்கு அது வலிமையான எல் நினோவாகிறது. அது ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கலாம். எல் நினோ முடிந்ததும், லா நினா உருவாகும்.

வெப்பநிலை கூடியவுடன், அடுத்து குளிர்ச்சி அடைவதுதானே இயல்பு? ஆக, சராசரி வெப்பநிலையைவிடக் குறைந்தால், அது `லா நினா'. இந்த ட்வின் பேபீஸ், ஏதோ சமீபத்தில் உருவான விஷயம் அல்ல. பல ஆயிரக்கணக்கான வருடங்களாக இருக்கின்றன. 15-20 ஆண்டுகளுக்கு ஒருமுறை, வெப்பநிலை உயர்ந்து வலுவான எல் நினோவாக மாறும். அப்போது பரவலாக கனமழை பெய்யும். சமீப காலங்களில் 1982, 1997, 2015-ம் ஆண்டுகளில் வெப்பநிலை இரண்டு டிகிரிக்கு மேல் அதிகரித்தது. அப்போது எல்லாம் தமிழ் நாட்டில் வரலாறு காணாத மழை பெய்திருக்கிறது.

மழைக்கு மட்டும் அல்ல... உலகம் முழுவதுமே பருவநிலையை மாற்றி அமைப்பது எல் நினோ மற்றும் லா நினாவின் வேலை. `கடந்த 20 ஆண்டுகளில் சென்ற ஆண்டு வந்த எல் நினோ காலம்தான் மோசமான காலம்' என்கிறார்கள் வானிலை ஆராய்ச்சியாளர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்