சிங்கப்பூர் காதல்!

பா.ஜான்ஸன்

`` `கிருஷ்ணவேனி பஞ்சாலை' படத்தை இயக்கினப்போ மனசு முழுக்க ஒரு சினிமா பண்ணணும்கிற வெறி இருந்தது. நான் நினைச்ச மாதிரி ஒரு படத்தை எடுக்கணும்கிற ஆசை, அதுக்குத் தகுந்த நம்பிக்கையைக் கொடுத்தது. அந்தப் படம், நான் மிகவும் மதிக்கும் இயக்குநர்கள் மகேந்திரன் சார், பாரதிராஜா சார் எல்லோரிடம் இருந்தும் பாராட்டுக்களை வாங்கித் தந்தது. ஆனால், அது ரொம்பவே சீரியஸான படம். இந்த முறை அந்த சீரியஸ்னஸில் இருந்து விலகி ஒரு படம் இயக்கியிருக்கேன்... ரொம்ப காதலோடு, காமெடியோடு கொண்டாட்டத்தோடு. `பறந்து செல்லவா' பட எடிட்டிங் டேபிளில் இருந்து ட்ரெய்லர் ஓடவிடுகிறார் இயக்குநர் தனபால்.

``ட்ரெய்லரில் முழுக்க முழுக்க சிங்கப்பூர் நிரம்பியிருக்கிறதே?''

``இந்தக் கதை சிங்கப்பூரில் நடக்கிற கதை. அதனால்தான் முழுக்க முழுக்க சிங்கப்பூர்லயே எடுத்திருக்கோம். வேலை செய்றவங்களுக்கு சிங்கப்பூர் வேற மாதிரி இருக்கும். ஆனால், சுற்றுலா போறவங் களுக்கு அது செம ரொமான்டிக்கான இடம். குறிப்பா சிங்கப்பூர் பெண்கள் அவ்வளவு சுதந்திரமா இருக்கிறாங்க. பெண்கள் சுதந்திரமா இருக்கும் இடத்தில், காதலும் சுதந்திரமா இருக்கும். தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூர் கிளம்பிப் போற ஹீரோ, அங்கே சந்திக்கும் விஷயங்கள்தான் கதை. ஹீரோ எப்பவும் காதலைத் தேடிக்கிட்டே இருப்பான். அதை அவன் எப்படிக் கண்டுபிடிக்கிறான்கிறதைத்தான் படத்துல சொல்லியிருக்கோம். ஹீரோவாக நாசர் சாரின் இரண்டாவது மகன் பாஷா நடிச்சிருக்கார்.’’

``வழக்கமான ஒன்லைன்போல் இருக்கிறதே?''

``இப்போதைய இளைஞர்களின் வாழ்க்கைப் பிரச்னையே வேறு. வாழ்க்கையை முழு எனர்ஜியோடு கொண்டாடுற இளைஞர்களும், நாம எதிர்பார்க்கவே முடியாத பிரச்னைகளோடு வாழக்கூடிய இளைஞர்களும் கலந்தே இருக்காங்க. நான் வாழ்க்கையில இருந்து கதைகள் எடுப்பதை ரொம்பவே விரும்புவேன். அப்படி ஓர் இளைஞனின் கொண்டாட்டமான, ஒரு சின்ன வாழ்க்கைப் பகுதிதான் படம். சரியான வேலை கிடைச்சு செட்டில் ஆகியாச்சுனு ஒரு ஃபீல் வர்றப்போ இருக்கும் பீரியட்தான் படத்தில் ஹீரோவுடையது. சிங்கப்பூர்ல வசிக்கும் தமிழ்ப் பெண் ஐஸ்வர்யா ராஜேஷ். ஹீரோவின் நண்பர்களா சதீஷ், `ஆர்ஜே’ பாலாஜி, கருணாகரன்னு... மூணு பேரும் முக்கியமான ரோல்களில் நடிச்சிருக்காங்க. அவங்க வரும்போது எல்லாம் செம ரகளையான காட்சிகள் இருக்கும்.''

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்