“பார்ப்பராய்டு... பெத்தராய்டு... ஆண்ட்ராய்டு!”

பா.ஜான்ஸன்

``ஆம்பளைக்கு அர்த்தம் என்ன?’னு டிக்‌ஷனரியில எழுதவேண்டி வந்தா, `சம்பூர்னேஷ் பாபு’னுதான் எழுதுவாங்க’ என்ற இவருடைய டயலர் ட்யூனே டரியலாக்குகிறது. தெலுங்கு சினிமாவின் சமீபத்திய சென்சேஷன் `பர்னிங் ஸ்டார்' சம்பூர்னேஷ் பாபு.

ஆந்திரா ஹீரோக்கள் அத்தனைப் பேரையும் கலாய்த்து இவர் நடித்த, `ஹ்ருதய கலேயம்', தெலுங்கு தேசத்தையே கதறவைத்தது. இரண்டாவது படத்திலும் கலாய்ப்புதான்... இந்த முறை போலீஸ் படம். பவன் கல்யாணின் `கப்பர் சிங்', மகேஷ் பாபுவின் `போக்கிரி', சூர்யாவின் `சிங்கம்' என சகட்டுமேனிக்கு எல்லா போலீஸ் படங்களையும் கிழித்து எறிந்த `சிங்கம் 123'யும் சூப்பர் ஹிட். அடுத்து ட்ரிபிள் ரோல்களில் நடித்திருக்கும் `கொப்பரி மாட்டா' விரைவில் ரிலீஸ்.

ஹீரோயினைக் கிண்டல்செய்யும் ரெளடிகளிடம், பவன் கல்யாண் ஸ்டைலில் கழுத்தைத் தடவியபடி `தைரியம் எப்பிடி இருக்கும்னு தெரியுமாடா? அந்தத் தைரியத்துக்கே பயம் வந்தா, தலையணைக்குக் கீழ என்னோட போட்டோவை வெச்சுக்கிட்டுத்தான் படுத்துக்கும்' என பன்ச் போட்டு மிரட்டுவார். இன்னொரு சீனில் ராஜமௌலி படத்தில் வருவதுபோல விநோதமான ஆயுதங்களுடன் வரும் வில்லன்களை லெங்த் டயலாக் பேசி மெர்சல் செய்வார். `சிங்கம் 123'-யில் க்ளைமாக்ஸில் வில்லன் குரூப்பை மொத்தமாகக் காலிசெய்ய தனி ஒருவனாகப் போவார். வில்லன் குரூப் கத்தி, கடப்பாறை, அருவா என டெரர் காட்ட, அவர்கள் எல்லோரைவும் வாழைப்பழத்தை வைத்தே கிழித்தெடுக்கும் சம்பூவின் ஃபைட் வேற லெவல். மொத்தத்தில் யூடியூப் வழி புகழ்பெற்ற நம் ஊர் சாம் ஆண்டர்சனின் தெலுங்கு வெர்ஷன்தான் சம்பு!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்