இன்பாக்ஸ்

34 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக சாம்பியன் டிராஃபி ஹாக்கி போட்டியில் பதக்கம் வென்றிருக்கிறது இந்தியா. சமீபத்தில் லண்டனில் நடந்த சாம்பியன்ஸ் டிராஃபி ஹாக்கி போட்டிக்கு, பெரிய நம்பிக்கை எதுவும் இல்லாமல்தான் போனது இந்தியா. ஆனால் இங்கிலாந்து, தென்கொரியாவுடனான போட்டிகளில் வெற்றி பெற்றதோடு, பலம் வாய்ந்த ஜெர்மனி அணியுடன் 3-3 என போட்டியை டிராவிலும் முடித்து இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் மோதியது. இறுதிவரை இரு அணிகளுமே கோல் அடிக்காத நிலையில் பெனால்ட்டி ஷூட் அவுட் மூலம் சாம்பியன்ஷிப்பை வென்றது ஆஸ்திரேலியா. `இறுதிப்போட்டியில் தோல்வியைத் தழுவினாலும் ஒலிம்பிக் போட்டிக்கு முன்பான இந்தப் பதக்கம், எங்களுக்கு மிகப் பெரிய உற்சாகத்தைத் தந்திருக்கிறது’ எனப் பரவசமாகியிருக்கிறார் இந்தியாவின் கேப்டன் சர்தார் சிங். மீண்டு வாங்க வீரர்களே!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்