ஒரு பல்கலைக்கழகத்தைக் கொல்வது எப்படி?

மருதன்

`தேசப்பற்று என்பது தொல்லை தரும் ஒரு விஷயம்' என்றார் இந்தியாவின் தேசியகீதத்தை இயற்றிய ரவீந்திரநாத் தாகூர். ஏன்? ‘தேசப்பற்று இருக்கும் இடத்தில் `தேசவிரோதிகள்' என சிலர் அடையாளப் படுத்தப்படுவார்கள். அவர்கள் கருணையுடன் நடத்தப்பட மாட்டார்கள்’ என வாதிட்டார் தாகூர்.

இன்று டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின்(ஜே.என்.யு) மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள ஒடுக்குமுறையை அவர் காண நேர்ந்தால், `மிகச் சரியாக இதைத்தான் நான் அன்றே எச்சரித்தேன்' என வருந்தியிருப்பார். அந்த வருத்தம் கரைவதற்குள் கையோடு அவரையும் கைதுசெய்து சிறையில் அடைத்திருப்பார்கள்!

இந்தியாவின் மதிப்புமிக்க பல்கலைக்கழகமான ஜே.என்.யு., இன்று வேட்டைக்காடாக மாறியுள்ளது. மாணவர்களும் பேராசிரியர்களும் கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமாரை, திடீரென தேசத்துரோகக் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்தது டெல்லி போலீஸ். நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கன்னையா குமார், தேசவிரோதமாகப் பேசினார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு. அவரது பேச்சில் தேசவிரோத அம்சங்கள் எதுவும் இல்லை எனப் பல்வேறு ஆதாரங்கள் வெளிவந்துள்ள நிலையில், பாட்டியாலா நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும் வழியில் பா.ஜ.க சார்பு வழக்குரைஞர்களால் கன்னையா குமார் கடுமையாகத் தாக்கப்பட்டார்.

பேராசிரியர்களும் பத்திரிகையாளர்களும்கூட தாக்குதலில் இருந்து தப்பவில்லை. உலக அளவில் கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கும் இந்தத் தாக்குதலில் இரண்டு குரல்கள் முக்கியமானவை.

முதலாவது, பாகிஸ்தானில் இருந்து வெளி வந்திருக்கும் மாணவர்களின் குரல். `டெமாக்ரடிக் ஸ்டூடன்ட்ஸ் அலையன்ஸ்' எனும் அமைப்பைச் சேர்ந்தவர்கள், கூட்டாக ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள். ‘சிந்திப்பதற்கும் முரண்படுவதற்கும் புதிய விஷயங்களை ஆராய்வதற்கும் சுதந்திரம் இருந்தால்தான் அதைக் கல்விக்கூடம் என்றே அழைக்க முடியும்; அறிவை வளர்த்தெடுக்கும் ஜே.என்.யு போன்ற ஓர் இடத்தில் அரசு தலையீடு செய்வது ஜனநாயக உரிமைகளுக்கு எதிரானது’ என்கிறது இந்த அறிக்கை.

ஜே.என்.யு-வின் முக்கியத்துவம் பாகிஸ்தான் மாணவர்களுக்குத்தான் தெரியும். காரணம், தங்கள் நாட்டிலும் ஜே.என்.யு போன்ற ஒரு பல்கலைக்கழகம் அமையவேண்டும் என்பது அவர்களின் கனவு. பாகிஸ்தானில் முரண் பாடுகளுக்கு இடம் இல்லை. அங்கு அரசியலில் மதமும், மதத்தில் அரசியலும் பிரிக்கவியலாதபடி ஒன்றாகக் கலந்திருப்பதால்,  ஜனநாயகத்துக்கு இடம் இல்லை. அரசை விமர்சிப்பவர்கள் தேசத்துரோகிகள் அல்லது இந்திய ஆதர வாளர்கள். இந்த நிலையை மாணவர் அமைப்பு களால் மாற்ற முடியும் என்பது அவர்களின் நம்பிக்கை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்