மைல்ஸ் டு கோ... 2

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
இயக்குநர் வெற்றி மாறன், படங்கள்: ஸ்டில் ராபர்ட்

பாலுமகேந்திராவிடம் நான் உதவி இயக்குநராகச் சேர ஆசைப்பட்டதற்கு ஒரு காரணம் உண்டு. அவர் லயோலா கல்லூரியில் சினிமா பற்றி இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை ஒரு வொர்க்‌ஷாப் நடத்துவார். அங்கு மட்டும் அல்ல... சினிமா வொர்க்‌ஷாப் எங்கு நடத்தினாலும் ஒரு கதையுடன்தான் தொடங்குவார். அது நம் ஊர் உலகத்துக்கே தெரிந்த பாட்டி வடை சுட்ட கதை.

‘` `ஒரு ஊர்ல ஒரு பாட்டி இருந்தாங்க’ என்றதும் கதைக் கேட்கும் அந்தக் குழந்தை உடனடியாக ‘ம்’ சொல்லும். அந்த ஒரு வரியை குழந்தை முழுமையாகப் புரிந்துகொண்டுவிட்டது என்பதற்கான அடையாளம் அந்த ‘ம்’. இப்படி இலக்கியத்திலும் கதை சொல்லலிலும் வாசகன் என்பவன் ஒரு சகப் படைப்பாளி. காரணம், ‘ஒரு ஊர்ல ஒரு பாட்டி வடை சுட்டுட்டு இருந்தாங்க...’ என்ற கதையைக் கேட்கும் குழந்தை, அந்த இடத்தில் தன் பாட்டியையும் தன் ஊரையும் ஃபில் இன் தி பிளாங்க்ஸ்போல் நிரப்பிக்கொள்ளும். இப்படி வாசிப்பவன் அவனாக சில விஷயங்களை உருவாக்கிக்கொள்வான்.

ஆனால் சினிமா ஊடகத்தில் அதற்கு அனுமதி இல்லை. ஒரு ஊர்ல ஒரு பாட்டி... ஓகே. அந்த ஊர் எது... கிராமமா, நகரமா, மாநகரமா? கிராமம் என்றால்... அது கடற்கரைக் கிராமமா, மலை அடிவாரமா, சமவெளிப் பகுதியா? வடை சுட்ட பாட்டிக்கு என்ன வயது? தாத்தா, உயிரோடு இருக்கிறாரா... இல்லையா? அவர் வசதியான பாட்டியா, ஏழைப் பாட்டியா?... இப்படிப் பல விஷயங்களை இயக்குநர் முதலில் தீர்மானிக்க வேண்டும்.''

இப்படி இலக்கியத்தையும் சினிமாவையும் வித்தியாசப்படுத்த இந்தப் பாட்டி கதையுடன் தொடங்கும் அந்த வொர்க்‌ஷாப் சுவாரஸ்யமானதாக இருக்கும். அதுதான், ‘சினிமா கத்துக்கணும்னா, அதை இவர்கிட்டதான் கத்துக்கணும்’ என அவரது அலுவலகம் நோக்கி என்னை அழைத்துச் சென்றது.

அப்போது `தமிழ் தெரிந்த ஓர் ஆள் தேவை' என ஃபாதர் ராஜநாயகத்திடம் பாலுமகேந்திரா சார் சொல்லியிருந்தார். அந்த நம்பிக்கையில்தான் அன்று அவர் முன்பு நின்றிருந்தேன்.

 `‘ஹலோ மிஸ்டர் பாலுமகேந்திரா. மை நேம் இஸ் வெற்றி மாறன். ஃபாதர் ராஜநாயகம் ஆஸ்க்டு டு மீட் யூ.’’

‘`வெளியில போ... நாளைக்கு வா பார்க்கலாம்.’’

மறுநாள்...

“நான் லயோலா ஸ்டூடன்ட். ஃபாதர் ராஜநாயகம் என்னை அனுப்பினார். உங்க வொர்க்‌ஷாப் அட்டெண்ட் பண்ணேன். இப்போ உங்ககிட்ட உதவியாளரா சேர ஆசை” என்றேன்.

என்னை தீர்க்கமாகப் பார்த்தார். ``ஃபாதர் அனுப்பினாரா?’'

``ஆமா சார். தமிழ் தெரிஞ்சவன் வேணும்னு நீங்க அவர்கிட்ட சொல்லியிருந்தீங்களாம்!’’

``தமிழ் இலக்கியம் தெரிஞ்சவன்ல சொல்லியிருந்தேன்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்