‘கபாலி’ அப்பா... ‘அவியல்’ ஃப்ரெண்ட்ஸ்... ‘இறைவி’ நான்!

’கபாலி ஸ்பெஷல்’நா.சிபிச்சக்கரவர்த்தி

``அமெரிக்காவில் உள்ள ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்பில் நடந்த குறும்பட நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். ஒவ்வொரு குறும்படமும் செம ஃபிரெஷ். அவை புதுப்புதுக் கதைகள் சொல்லின. இங்கேயும் அதுபோல போட்டிகள், நிகழ்ச்சிகள் நடத்தணும்'' என்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். த்ரில் `பீட்சா' கொடுத்து, `ஜிகர்தண்டா'வில் வேற லெவல் தொட்டு, இப்போது `இறைவி' என படத்தின் தலைப்பிலேயே பொறிவைக்கிறார்.
 
``இறைவனோட பெண்பால்தான் `இறைவி'. நம்மைச் சுற்றி இருக்கும் பெண்களின் கதைதான் படம். எல்லா வேலைகளும் முடிஞ்சு, படம் ரிலீஸுக்குத் தயாரா இருக்கு.''

``எஸ்.ஜே.சூர்யாவையும் நடிக்கவெச்சிருக்கீங்களே... அவருக்கு என்ன ரோல்?’’

``இந்தக் கதையை எழுதும்போதே லீட் ரோலில் எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா நடிச்சா நல்லா இருக்கும்னு நினைச்சேன். 

எஸ்.ஜே.சூர்யா சார் படங்களுக்கு நான் பெரிய ஃபேன். அவருடைய ஆட்டிட்யூட் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நார்மலா பேசும்போதே செம கிண்டல், கேலி பண்ணுவார். அதை அப்படியே படத்துலயும் காட்டியிருக்கேன். `இதுல அவர் நடிச்சிருக்கார்’னு சொல்றதை விட `அவர் அவராவே வாழ்ந்திருக்கார்’னு தான் சொல்லணும்.''

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்