கணிதன் - சினிமா விமர்சனம்

போலிச் சான்றிதழ் நெட்வொர்கை, தன் மீடியா நெட்வொர்க் உதவியுடன் டெலீட் செய்யும் ஒரு ரிப்போர்ட்டரின் கதை.

 லோக்கல் டி.வி சேனல் ரிப்போர்ட்டர் அதர்வாவுக்கு, பி.பி.சி-யில் சேர்வது கனவு. அது நனவாகும் தருணத்தில் கல்விக்கடன் வாங்கி  மோசடி செய்ததாகக் கைதாகிறார். தனது ஒரிஜினல் சான்றிதழில் இருந்து போலிச் சான்றிதழ் தயாரித்து, அதன்மூலம் நடக்கும் மோசடிக்குப் பின்னால் உள்ள மாஃபியா கும்பலை அழிக்கத் திட்டமிடுகிறார். அந்த ப்ளானிங்கில் வென்றனா இந்தக் ‘கணிதன்’?

சிக்ஸ்பேக் பாடியும் நாலைந்து நாள் தாடியு மாக துறுதுறு அதர்வா, ரிப்போர்ட்டர் கேரக்டருக்கு செம ஃபிட். ‘மெட்ராஸ்’ ஒல்லிபெல்லி கேத்ரீன் தெரேசாவா இது? எக்ஸ்ட்ரா வெயிட் ஏற்றி கிறுகிறுக்கவைக்கிறார். வருகிறார், ஆடுகிறார், போகிறார். வில்லன் தருண் அரோரா... ‘இப்போ வெடிப்பார், அப்போ வெடிப்பார்' எனக் காத்திருந்தால், கடைசி வரை காத்திருக்க மட்டுமே வைக்கிறார். நட்புக்காக உயிரைவிடும் நண்பர்களாக கருணாகரன், பாக்யராஜ்... தமிழ் சினிமாவின் டெம்ப்ளேட் கேரக்டர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்